திருவரங்கம் சிறீமத் ஆண்டவன் ஆசிரமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவரங்கம் சிறீமத் ஆண்டவன் ஆசிரமம் (Srirangam Srimadh Andavan Ashramam ) என்பது தமிழ்நாட்டின், திருவரங்கத்தின் கொல்லிடக் கரையில் அமைந்துள்ள ஒரு வடகலை வைணவ ஆசிரமம் ஆகும். இராமானுசரும், வேதாந்த தேசிகரும் உருவாக்கிய விசிட்டாத்துவைதக் கோட்பாட்டை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஓர் நிறுவனமாகும். இந்த நிறுவனம் அதன் வேர்களை வேதாந்த தேசிகர் மூலமாகவும், இராமானுசருக்கு கிடாம்பி ஆச்சான் மற்றும் கூரத்தாழ்வான் மூலமாகவும் காணலாம். இந்த நிறுவனத்தின் தலைவர் "ஆண்டவன்" அல்லது "ஆண்டவன் சுவாமிகள்" என்று அழைக்கப்படுகிறார். இது திருவரங்கம் அரங்கநாத சுவாமியால் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இராமானுசரின் போதனைகளை பின்பற்றும் வேதாந்த தேசிகரைப் பின்பற்றும் அமைப்புகளில் இந்த ஆசிரமம். பரகலா மடம், அகோபில மடம், புண்டரீகபுரம் ஆண்டவன் ஆசிரமம் போன்றவை பிற மடங்களாகும்.

இந்த ஆசிரமத்தின் முக்கிய செயல்பாடுகளில் சமாஷ்ராயணம் மற்றும் பரண்யாசம், கலகாபிசேகங்கள் (உயர் ஆன்மீக பாடங்கள்), பாடசாலைகள் மற்றும் மதச்சார்பற்ற கல்லூரிகள் மூலம் வேத மற்றும் மேற்கத்திய கல்வியை கற்பித்தல், பல்வேறு கோயில்கள் மற்றும் திவ்ய தேசங்களை நிர்வகித்தல் மற்றும் நிதியளித்தல், இராமானுச சித்தாந்தத்தை அதன் பல்வேறு மையங்கள் மூலம் பரப்புதல் ஆகியவை அடங்கும்.

ஒவ்வொரு மாதமும் வரும் முக்கிய விழாக்களின் சிறப்புகளையும் அவற்றைக் கடைபிடிக்க வேண்டிய முறைகளையும் விவரிக்க ரங்கநாத பாதுகா என்ற மாத இதழையும் வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]