திருக்குறள் வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்நூல் முதுமொழி வெண்பா என்னும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. நூலாசிரியர் தச்சாம்பாடி ஜெ.சின்னசாமி நயினார் அவர்கள். நூலின் பதிப்பாசிரியர்கள் திருக்குறள் மாமணி புலவர் ஆணை.நரசிங்கப்பெருமாள் எம்.ஏ., பேரா.சிரே .தன்யகுமார். தியாகராய நகரிலுள்ள ஜைன இளைஞர் மன்றம் இந்நூலை வெளியிட்டுள்ளது. (மன்ற வெளியீடு 86 - 2012 ஆமாண்டு ). புத்தகத்தின் நூலடைவு பகுதியில் ஆங்கிலத்தில் "Author added two lines to Thirukkural Verses which blends naturally making it a venba metre. This venba explains the theme of Devar the author of Thirukkural. J.Chinnasamy Nainar had written a lucid commentry with exhaustive explanations from different sources. The manuscript of Rural Tamil Jain genius is published after four decades. A novel and rare presentation of Thirukkural" என்று காணப்படுகிறது. நூலாசிரியர் இதனை 1970க்கு முன்னர் எழுதியுள்ளார் என்பதனை நூலின் பதிப்புரை தெரிவிக்கிறது. தேர்ந்த புலமையாளரும் வர்தமான் பதிப்பகத்தின் ஆசிரியருமான ஜைன அறிஞர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் உறவினரான Dr.கனக.அஜித்தாஸ் அவர்களிடமிருந்து இந்நூல் எனக்குக்  கிடைத்தது. நூலில் 1330 குறள்பாக்களுக்கும் ஜைன சமய விளக்கங்கள் வெண்பாக்களாக இடம் பெற்றுள்ளன. நூலாசிரியரின் உரையுடன் நூல் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. திருக்குறளுக்கு ஜைன சமயம் சார்ந்த உரைகள் பல எழுதப்பட்டுள்ளன. உ.வே.சா அவர்கள் எவ்வளவோ தேடியும் சினேந்திர வெண்பா நூல் கிடைக்கவில்லை என்று சிவசிவ வெண்பாவின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். திருக்குறள் வெண்பா என்ற இந்த நூல் எளிய செய்யுள் நடையில்  சிறந்த உரையுடன்  அமைந்துள்ளது. பண்டித ஜெகவீர பாண்டியரின் திருக்குறள் குமரேச வெண்பாவிற்குப் பிறகு திருக்குறள் முழுமைக்குமான செய்யுள் விளக்கமாக அமைந்திருக்கும் நூல் இது ஒன்றே ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குறள்_வெண்பா&oldid=2661112" இலிருந்து மீள்விக்கப்பட்டது