தாலியம் ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலியம் ஐதரைடு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
தாலேன்[1] (பதிலீட்டு முறை)
மூஐதரிடோதாலியம்[1] (சேர்க்கை முறை)
இனங்காட்டிகள்
82391-14-8
ChEBI CHEBI:30437 Y
ChemSpider 123171 Y
Gmelin Reference
362119
InChI
  • InChI=1S/Tl.3H Y
    Key: NWUWMQRSDSSETA-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139662
SMILES
  • [TlH3]
பண்புகள்
TlH
3
வாய்ப்பாட்டு எடை 207.4071 கி மோல்−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தாலியம் ஐதரைடு (முறையாக தாலியம் மூஐதரைடு என்று பெயரிடப்பட்டது) என்பது TlH
3
என்ற விகித வாய்ப்பாட்டைக் கொண்ட கனிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் இன்னும் அதிக அளவுகளில் தயாரிக்கப்படவில்லை.எனவே, அதன் ஒட்டுமொத்த பண்புகள் அறியப்படாமலேயே இருக்கின்றன. இருப்பினும், மூலக்கூறு நிலை தாலியம் ஐதரைடு திண்ம வாயு கோவைகளில் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. தாலியம் ஐதரைடானது, முக்கியமாக கல்வி சார்ந்த நோக்கங்களுக்காக தயாரிக்கப்படுகிறது.

தாலியம் ஐதரைடு என்பது எளிமையான தாலேன் ஆகும். 13 ஆம் தொகுதி உலோகங்களில் தாலியம் மிகக்கனமானதாகும்; 13 ஆம் தொகுதி ஐதரைடுகளின் நிலைத்தன்மையானது தொடர் எண் அதிகரிக்கும் போது குறைகிறது. ஐதரசனின் 1s எலக்ட்ரான் சுற்றுவட்டப்பாதையுடன் உலோகத்தின் இணைதிறன் எலக்ட்ரான் சுற்றுவட்டப்பாதைகளின் மோசமான மேற்பொருந்துதல் இதற்கான காரணமாக கூறப்படுகிறது. ஆரம்ப அறிக்கைகளை ஊக்குவித்த போதிலும், தாலியம் ஐதரைடு வகை சேர்மங்களை பிரித்தெடுப்பதற்கு வாய்ப்பில்லாமலே இருந்தது. திண்ம வாயுக் கோவை பிரித்தெடுத்தல் ஆய்வுகளில் மட்டுமே தாலியம் ஐதரைடுகள் காணப்படுகின்றன; ஹைட்ரஜன் வாயு முன்னிலையில் தாலியத்தை சீரொளி வெப்பந்தணிப்பு முறையில் வாயு நிலையில் அகச்சிவப்பு நிறமாலை பெறப்பட்டது. [2] இந்த ஆய்வு இஷ்வெர்ட்ஃபெகர் நடத்திய தொடக்கமுதலே இருந்த கணக்கீடுகளின் அம்சங்களை உறுதிப்படுத்தியது, இது தாலியம் மற்றும் இண்டியம் ஐதரைடுகளின் ஒத்த நிலைத்தன்மையைக் குறிக்கிறது. [3] இன்றுவரை ஒரு தாலியம் ஐதரைடு அணைவுச் சேர்மம் ஒன்றின் பிரித்தெடுத்தல் உறுதிப்படுத்தப்படவில்லை.

வரலாறு[தொகு]

2004 ஆம் ஆண்டில் அமெரிக்க வேதியியலாளர், லெஸ்டர் ஆண்ட்ரூஸ் முதல் முறையாக தாலியம் ஐதரைடை தொகுப்பு முறையில் தயாரித்தார். இந்த வினை வரிசை தாலியத்தின் அணுக்கருவாக்கம், அதன்பிறகு ஐதரசனுடன் கிரையோஜெனிக் இணை-படிவு என்ற படிநிலைகளில் நகர்ந்து குற்றலை புற ஊதா கதிர்வீச்சுடன் முடிந்தது.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "thallane (CHEBI:30437)". Chemical Entities of Biological Interest. UK: European Bioinformatics Institute. 27 November 2006. Main. பார்க்கப்பட்ட நாள் 10 October 2011.
  2. Andrew, L.; Wang, X. (2004). "Infrared Spectra of Thallium Hydrides in Solid Neon, Hydrogen, and Argon.". J. Phys. Chem. A 108: 3396–3402. doi:10.1021/jp0498973. 
  3. Schwerdtfeger, P.; Hunt, P. (1996). "Are the Compounds InH3 and TlH3 Stable Gas Phase or Solid State Species?". Inorg. Chem. 35: 2085–2088. doi:10.1021/ic950411u. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்_ஐதரைடு&oldid=2803536" இலிருந்து மீள்விக்கப்பட்டது