தவே கிரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிடு ஏ. கிரீன்
David A. Green
பிறப்பு1959 (அகவை 64–65)
வாழிடம் ஐக்கிய இராச்சியம்
தேசியம் பிரித்தானியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்கேவண்டிழ்சு ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்சுட்டீவன் குல்

தவே கிரீன் (Dave Green) (பிறப்பு: 1959) ஐக்கிய இராச்சியத்திலுள்ள கேம்பிரிட்ஜ் நகர கேவண்டிழ்சு ஆய்வக வானியற்பியலாளரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளரும் ஆவார். இவர் சர்ச்சில் கல்லூரி ஆய்வுறுப்பினரும் இயற்பியல் ஆய்வு இயக்குநரும் ஆவார். இவர் விண்மீன்களின் மீவெடிப்பு எச்சங்களைப் பற்றிய ஆய்வில் கவனத்தைக் குவிக்கிறார்; இந்த ஆய்வில்G1.9+0.3 மீவெடிப்பு ஆய்வும் இதுவரை கண்டறியாத மிக இளைய பால்வெளி மீவெடிப்பு எச்ச ஆய்வும் அடங்கும். இவர் எஃப். இரிச்சர்டு சுட்டீவென்சனுடன் இணைந்து வரலாற்றியலான மீவிண்மீன் வெடிப்பு குறித்த நூலொன்றை எழுதியுள்ளார்.

பொழுதுபோக்கு[தொகு]

இவர் படகுபயிற்சி, துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவே_கிரீன்&oldid=3460309" இலிருந்து மீள்விக்கப்பட்டது