தர்வாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தர்வாசா
Derweze
தர்வாசாDerweze is located in துருக்மெனிஸ்தான்
{{{alt}}}
தர்வாசா
Derweze
துருக்மெனித்தானில் அமைவிடம்
அமைவு: 40°15′09.48″N 58°26′21.93″E / 40.2526333°N 58.4394250°E / 40.2526333; 58.4394250
நாடு Flag of Turkmenistan.svg துருக்மெனிஸ்தான்
மாகாணம் அகால் மாகாணம்
மக்கள் தொகை (1989 கணக்கெடுப்பு)
 - நகரம் 1,683

தர்வாசா (Derweze அல்லது Darvaza, பொருள்: கதவு) துருக்மேனிஸ்தான் நாட்டின் காராக்கும் பாலைவனத்தின் நடுவே அமையப் பெற்றுள்ள ஒரு கிராமம் ஆகும். இது துருக்மேனிஸ்தான் தலைநகர் அசுகாபாதுக்கு வடக்கே 260 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் பெரும்பாலும் நாடோடி இனமான டெகே குல மக்கள் குடி பெயர்ந்துள்ளனர்.

எண்ணெய்க் கிணறு[தொகு]

தர்வாசா எரிவாயுக் கிணறு (2010)

இங்கு இயற்கை எரிவாயு அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்த சோவியத் புவியியல் நிபுணர்கள், 1971 ஆம் ஆண்டு துளைக்க துவங்கினர்.[1] அப்போது நிலம் தகர்ந்து விழுந்ததில், 230 அடி விட்டத்திற்கு துவாரம் உருவானது. நச்சு வாயு பரவாமல் தடுக்க திட்டமிட்ட அறிவியலாளர்கள், அந்த துவாரத்தில் தீ வைக்க முடிவெடுத்தனர்.[2] சில நாட்களில் எரிவாயு தீர்ந்து தீ சுடர் அணையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இன்று வரை தீ சுவாலை எரிந்து கொண்டிருக்கிறது.[3]

உள்ளூர் வாசிகள் இதை நரகத்தின் கதவு என குறிப்பிடுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தர்வாசா&oldid=1386433" இருந்து மீள்விக்கப்பட்டது