தர்பார் சதுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Patan Durbar Square in 2010
Map
Map

தர்பார் சதுக்கம் ( Durbar Square ) அல்லது அரண்மனை சதுக்கம் என்பது நேபாளத்தில் உள்ள பழைய அரச அரண்மனைகளுக்கு எதிரே உள்ள கட்டடங்கள் மற்றும் பிற பகுதிகளைக் குறிக்கும் பொதுவான பெயராகும்.[1] இப்பெயர் பாரசீக மொழியின் தர்பார் என்பதிலிருந்து வந்தது. தர்பார் சதுக்கங்கள் கோவில்கள், சிலைகள், திறந்த அரசவைகள், நீரூற்றுகள் மற்றும் பலவற்றால் நிறைந்துள்ளன. நேபாளத்தை ஒன்றிணைப்பதற்கு முன்பு, நேபாளம் சிறிய சுதந்திர ராச்சியங்களைக் கொண்டிருந்தது. மேலும் தர்பார் சதுக்கங்கள் நேபாளத்தில் உள்ள பழைய ராச்சியங்களின் சில முக்கிய எச்சங்களாகும். காட்மாண்டு சமவெளியில் மூன்று தர்பார் சதுக்கங்கள் உள்ளன. அவை நேபாளம் ஒன்றிணைவதற்கு முன்பு அங்கு அமைந்திருந்த மூன்று நேவார் ராச்சியங்களுக்கு சொந்தமானவை. அவை மிகவும் பிரபலமானவை: காத்மாண்டு நகரச் சதுக்கம், பதான் அரண்மனை சதுக்கம்[2] மற்றும் பக்தபூர் தர்பார் சதுக்கம் . இந்த மூன்று அடையாளங்களும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களங்களாகும் . 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு தரும் பூகம்பத்தின் காரணமாக இந்த தளங்கள் கடும் சேதத்தைப் பெற்றன. [3][4] ஆனால் பெரும்பாலான கட்டமைப்புகள் இன்றும் உள்ளன அல்லது புனரமைக்கப்பட்டன.[5]

இதனையும் காண்க[தொகு]

இதனையும் காண்க[தொகு]

புகைப்படங்கள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.expedia.co.in/Patan-Durbar-Square-Lalitpur.d6114528.Attraction
  2. Pallav Ranjan (2007). "Patan Durbar Square". Spiny Babbler. Archived from the original on 2009-08-22. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
  3. https://twitter.com/SnowdenJohn/status/591857002239766528/photo/1
  4. "Earthquake in Nepal: Patan Durbar Square shattered completely". India.com, online. பார்க்கப்பட்ட நாள் 2015-04-25.
  5. https://www.nepaltraveladventure.com/blog/patan-durbar-square/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்பார்_சதுக்கம்&oldid=3828001" இலிருந்து மீள்விக்கப்பட்டது