தரோகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தரோகாக்கள் (Daroga) என்பவர்கள் இந்தியாவின் முகலாயப் பேரரசு காலத்திய பிரித்தானிய இராச்சியத்தின் காவல்துறை அதிகாரிகளாக இருந்தவர்களாவர்.[1] முகலாயப் பேரரசின் ஒரு தரோகா முகலாய மன்னரின் "அடிமைகளின்" கண்காணிப்பாளராக இருந்தார்.[2]

தரோகா ஆற்றிய கடமைகள்[தொகு]

தரோகாக்கள் இராசபுத்திரர்கள் மற்றும் முகலாயர்களின் படைகளில் பணியாற்றினர். மேலும் அவர்கள் ஆற்றிய கடமைகளுக்கு ஏற்ப, தரோகாக்களுக்கு தரோகா-இ-சுதர்கானா, தரோகா-இ-டோப்கானா மற்றும் தரோகா-இ-பரூத்கானா போன்ற பல்வேறு பட்டப் பெயர்கள் வழங்கப்பட்டன.[3]

குறைந்தபட்சம் 100 சதுர மைல்கள் (26,000 எக்டேர்; 64,000 ஏக்கர்) பகுதிகளுக்கு பொறுப்பான மாவட்ட நீதிபதிகளுக்கு தரோகாக்கள் பதிலளித்தனர்.[4] இவ்வளவு பெரிய பகுதிக்கு நீதிபதிகள் பொறுப்பு ஏற்கவேண்டும் என்பதால், தரோகாக்கள் பொதுவாக மிகவும் சக்திவாய்ந்த உள்ளூர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். சில சந்தர்ப்பங்களில், இவர்கள் தொழிற்சாலைகளின் பொறுப்பில் இருந்தனர்.[5] தரோகாக்கள் கிராமப்புறங்களில் காவல்துறையின் கட்டுப்பாட்டையும் கொண்டிருந்தனர்.[6]

பெண் தரோகா[தொகு]

ஏகாதிபத்திய அரசாங்கத்தின் அந்தப்புர நிர்வாகத்திற்கு நியமிக்கப்பட்ட பெண்களுக்கும் தரோகா பட்டம் வழங்கப்பட்டது. இந்த தரோகா பதவியை பேரரசரே நியமித்தார். தரோகாவாக பணியேற்கும் பெண் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஒரு பெரிய கவுரவம் வழங்கப்பட்டது.[7] இந்தப் பதவிகள் வழங்கப்பட்ட பெண்கள் நன்கு வளர்ந்தவர்கள், படித்தவர்கள் மற்றும் மரியாதைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[8] பேரரசி நூர்சகானின் தாயார் அசுமத் பானு பேகம் ஒரு காலத்தில் இந்தப் பாத்திரத்தில் பணிபுரிந்துள்ளார்.[9] பெண் தரோகாக்கள் நீதிமன்ற ஆசாரம் மற்றும் அரண்மனைக்குள் அமைதியை பேணுவதற்கு பணிக்கப்பட்டனர்.[10]

பிறப்பால் தரோகா[தொகு]

வரலாற்றாளர் இரம்யா சிறீரீனிவாசன் கூறுகையில், "ராசபுத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் இணைப்பில் உருவாகும் முறைகேடான ஆண் குழந்தைகளை தரோகா மற்றும் கோலா என்றும், அத்தகைய பிரிவிலிருந்து பிறக்கும் பெண் குழந்தைகள் தரோகி மற்றும் கோலி என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.[11]

இராவண ராசபுத்திரர்கள்[தொகு]

லிண்ட்சே ஆர்லன் தரோகாக்களை இராவண ராசபுத்திரகள் என அடையாளம் காட்டினார்.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shah Mahmoud Hanifi (2011). Connecting Histories in Afghanistan: Market Relations and State Formation on a Colonial Frontier. Stanford University Press. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-7411-6.
  2. Sezgin, Fuat; Amawi, Mazin; Ehrig-Eggert, Carl; Neubauer, Eckhard (1997). Mughal India According to European Travel Accounts: Texts and Studies, Volume 78 (reprint ed.). Frankfurt, Germany: Institute for the History of Arabic-Islamic Science at the Johann Wolfgang Goethe University. LCCN 2002487182. p. 176: ...Daroga or Superintendent of the Emperor's slaves...
  3. "Volume 22". Indica (India: Heras Institute of Indian History and Culture, St. Xavier's College, Mumbai). 1985. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-686X. https://books.google.com/books?id=3gdDAAAAYAAJ&q=daroga. "The camel corps and camel gun was a very useful war innovation in the deserts of Rajasthan in general and Jaipur in particular. The camel corps was looked after by a separate department known as Sutar-Khana. The daroga-i-sutarkhana headed this department under the direct control of the State bakhshi and assisted by a mushrif, who maintained the records of expenditure and managed the other requirements of the corps. [..] This department used to cast cannon and was headed by a daroga. The Kachhwaha rulers and their artillery always remained in contact with the Mughal army. Therefore, their influence was natural. That is why the posts and designations in Kachhwaha artillery were similar to those of the Mughals. The department was headed by the daroga-i-topkhana who was assisted by the amir, mushrif, potedar, topchi, golandaj, musketeers, barkandaj and blacksmith. These officers were also attached to the department of ordnance which was known as Mahakma Atish and Baroodkhana. It was the duty of the daroga-i-baroodkhana to arrange necessary materials like lead, flax bags, salt-petre, glass and palitas for the manufacturing of gunpowder in the state. The Kachhwaha rulers used to give salary in cash to their topchi. The local soldiers were offered land; most of the musketeers were foreigners. But the officers' class was more among them. The British also succeeded in getting jobs in the Kachhwaha artillery with the rising influence of the British over Rajputana and came to be known as Firangis. The cannon which were used by the army can be classified as heavy and light artillery.". 
  4. Louis A. Knafla (2002). Crime, Gender, and Sexuality in Criminal Prosecutions. Vol. 17. Greenwood Publishing Group. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-31013-0.
  5. Mohibbul Hasan (2005). Waqai-i manazil-i Rum: Tipu Sultan's mission to Constantinople. Aakar Books. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87879-56-4.
  6. Sen, S. P., தொகுப்பாசிரியர் (1970). "Volume 9". The Quarterly Review of Historical Studies (Kolkata, India: Institute of Historical Studies). பன்னாட்டுத் தர தொடர் எண்:0033-5800. https://books.google.com/books?id=ZfJtAAAAMAAJ&q=%22rural+police%22+%22Daroga%22. "The rural police were subject to the orders of the Daroga...". 
  7. Lal, K.S. (1988). The Mughal Harem. New Delhi: Aditya Prakashan. pp. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185179034.
  8. Mukherjee, Soma (2001). Royal Mughal Ladies and their Contributions. New Delhi: Gyan Publishing House. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8121207606.
  9. Jahangir, Nur-ud-Din Muhammad Salim (1974). The Tuzuk-i-Jahangiri: or memoirs of Jahangir. Lahore: Sang-e-Meel Publications. p. 216. இணையக் கணினி நூலக மைய எண் 83636859.
  10. Abu'l Fazl Ibn-Mubarak (1977). D.C, Phillot (ed.). The Ain-i-Akbari. H. Blochman, tr. New Delhi: Munishram Manoharlal. pp. 45–47. இணையக் கணினி நூலக மைய எண் 631607437.
  11. Sreenivasan, Ramya (2006). "Drudges, Dancing Girls, Concubines: Female Slaves in Rajput Polity, 1500–1850". In Chatterjee, Indrani; Eaton, Richard M. (eds.). Slavery and South Asian History. Bloomington, USA: Indiana University Press. pp. 136–161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0253116710. LCCN 2006008098. இணையக் கணினி நூலக மைய எண் 191950586. p. 144: More derogatory terms included gola (fem. goli) and daroga (fem. darogi), each suggesting descent from the illegitimate union of Rajputs and their "inferiors".
  12. Harlan, Lindsey (2018) [First published 1992]. "Satimata Tradition: The Transformative Process". Religion and Rajput Women: The Ethic of Protection in Contemporary Narratives. University of California Press. pp. 112–153. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0520301757. LCCN 91002389. இணையக் கணினி நூலக மைய எண் 1031457813. p. 145: They would be Darogas (also called Ravana Rajputs), who constitute an endogamous caste of palace servants.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரோகா&oldid=3849755" இலிருந்து மீள்விக்கப்பட்டது