தயமர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயமர் மாவட்டம்
ضلع دیامر
Location of தயமர் மாவட்டம்
நாடு Pakistan
பிரதேசம்[[File:|23x15px|border |alt=|link=]] Gilgit-Baltistan ஜில்ஜிட்-பால்டிஸ்தான்
தலைமையிடம்சிலாஸ்
அரசு
 • வகைமாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்7,234 km2 (2,793 sq mi)
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்270,000
தாலுகாக்கள்2

தயமர் மாவட்டம் (Diamer District), இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சிலாஸ் நகரம் ஆகும்.2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 7,234 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தயமர் மாவட்டத்தின் மக்கள் தொகை 2,70,000 ஆகும்.[1]இம்மாவட்டம் இரண்டு தாலுகாக்களைக் கொண்டது.

அமைவிடம்[தொகு]

தயமர் மாவட்டத்தின் வடக்கில் தாங்கிர் மாவட்டம் மற்றும் கில்ஜித் மாவட்டங்கலும், கிழக்கில் ஆஸ்தோர் மாவட்டம், தெற்கில் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மன்செரா மாவட்டம் மற்றும் ஆசாத் காஷ்மீரின் நீலம் மாவட்டமும், மேற்கில் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மேல் கோகிஸ்தான் மாவட்டமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. காரகோரம் நெடுஞ்சாலை தயமர் மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • Chohan, Amar Singh (1997), Gilgit Agency 1877-1935 (Second Reprint ed.), Atlantic Publishers & Dist, ISBN 978-81-7156-146-9 – via archive.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயமர்_மாவட்டம்&oldid=3608579" இலிருந்து மீள்விக்கப்பட்டது