தம்பையா ஏகாம்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரி. ஏகாம்பரம்
T. Ehambaram
இலங்கை நாடாளுமன்றம்
for மூதூர்
பதவியில்
1960 – 22 மார்ச் 1961
முன்னையவர்எம். ஈ. எச். முகம்மது அலி
பின்னவர்எம். ஈ. எச். முகம்மது அலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1913-10-12)12 அக்டோபர் 1913
இறப்புமார்ச்சு 22, 1961(1961-03-22) (அகவை 47)
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
இனம்இலங்கைத் தமிழர்

தம்பையா ஏகாம்பரம் (Thambiah Ehambaram, 12 அக்டோபர் 1913.[1] – 22 மார்ச் 1961) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை நகரசபைத் தலைவரும் ஆவார்.[2]

திருகோணமலை நகரசபையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராகப் பணியாற்றிய ஏகாம்பரம் பல ஆண்டுகள் நகரசபைத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் இரட்டை-உறுப்பினர் தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அத்தொகுதியின் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[3] சூலை 1960 தேர்தலில் இவர் மீண்டும் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[4] இவர் பதவியில் இருக்கும் போதே 1961 மார்ச் 22 இல் காலமானார்.[5]

தேர்தல் வரலாறு[தொகு]

த. ஏகாம்பரத்தின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
1960 மார்ச் நாடாளுமன்றம் மூதூர் இதக 10,685[3] தேர்வு
1960 சூலை நாடாளுமன்றம் மூதூர் இதக 13,304[4] தேர்வு

மறைவு[தொகு]

1961 மார்ச் 22 அன்று திருகோணமலை கச்சேரி வாயிலில் நடைபெற்ற சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய ஏகாம்பரம் அவரது வீட்டிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுத் தனது 47-வது அகவையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ahambaram, Thambiah". இலங்கை நாடாளுமன்றம்.
  2. 2.0 2.1 "மூதூர் எம்.பி. திடீர் மரணம்". யாழ்ப்பாணம்: ஈழநாடு. 23 மார்ச் 1961. 
  3. 3.0 3.1 "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2015-02-06.
  4. 4.0 4.1 "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-02-06.
  5. டி. பி. எஸ். ஜெயராஜ் (15 சூலை 1997). ""Golden Lord" A Thangathurai: An Eastern Man for All Seasons!". Tamil Times XVI (7): 15-21. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1997.07. பார்த்த நாள்: 2015-02-06. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பையா_ஏகாம்பரம்&oldid=3557106" இலிருந்து மீள்விக்கப்பட்டது