தமிழ்நெறி விளக்க உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நெறி விளக்க உரை என்னும் நூலும் நூலாசிரியராலேயே செய்யப்பட்டது. இப்படி நூலும் உரையும் சேர்த்தே எழுதிய ஆசிரியர்களில் இந்த உரைநூலே காலத்தால் முந்தியதாகக் காணப்படுகிறது. இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு.

இந்த உரைநூலின் பாங்கு

  • இந்த நூலில் எட்டுவகை மணங்களை விளக்கும் இலக்கணப் பாடல் உள்ளது. இதற்கு உரை எழுதுகையில் சிற்றட்டகம் என்னும் நூலிலிருந்து மேற்கோள் பாடல்களைத் தந்து இந்த உரை விரிகிறது.
  • இவ்வுரை தரும் விளக்கங்களில் சில
    • அகச் செயலால் இருதலையும் தீரா அன்பினதாகிய காமம் அகப்பொருள்.
    • புறச் செயலால் நிகழும் மறம் புறப்பொருள்
    • அகம் புறம் ஆகிய இரண்டும் அறம் பற்றி நிகழும்.
    • அறத்தால் வீடுபேறு கிட்டும்.
  • ”இதற்கு மேல் கருதத் தக்க பகுதி இல்லை.” என்று இந்த உரை எழுதுவது இந்த உரைநூலின் நடைப்பாங்குகளில் ஒன்று.
  • உரைப்பகுதி ‘என்பது’ என்னும் சொல்லைக்கொண்டு முடிவுறுகிறது.

கருவிநூல்[தொகு]

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நெறி_விளக்க_உரை&oldid=3176417" இலிருந்து மீள்விக்கப்பட்டது