தமிழ்நாடு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேத மருத்துவம் குறித்த கல்விகளை அளிக்கும் கல்லூரிகள் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இக்கல்லூரிகளில் ஆயுர்வேதாச்சார்யா (இளம்நிலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) (ஆங்கிலம்: Bachelour of Ayurvedic Medicine and Surgery -B.A.M.S.) எனும் இளநிலைப் பட்டப்படிப்புகள் அளிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஒன்று நாகர்கோவிலில் செயல்பட்டுவருகிறது . தனியார் நிர்வாகத்தின் கீழான சுயநிதி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் ஐந்து உள்ளன. இவற்றுள் சென்னையிலுள்ள கொரட்டூர், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூலூர், திருச்சி மாவட்டத்திலுள்ள சன்னாசிப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பூந்தண்டலம் ஆகிய இடங்களில் உள்ள நான்கு சுயநிதிக் கல்லூரிகளில் கல்லூரி ஒவ்வொன்றிலும் 30 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பெரும்புதூர் எனும் ஊரிலுள்ள சுயநிதிக் கல்லூரியில் 20 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் என்று மொத்தம் 140 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன.