தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழினச் சுத்திகரிப்புக் குறிகாட்டி சனவரி முதல் ஏப்ரல் 2009 வரை இலங்கையில் வன்னிப் பகுதி மீது இலங்கைப் படைத்துறையினர் நடாத்திய பல்குழல் பீரங்கி, ஆட்டிலறி மற்றும் குறுந்தூரப் பீரங்கித் தாக்குல்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறது. இந்தக் குறிகாட்டிக்கான தகவல்கள் உரிய முறையில் ஆதாரபூர்வமான தரவுகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை வட்டாரங்கள், நீதித்துறை வட்டாரங்கள், வடக்கு-கிழக்கு மனித உரிமைச் செயலகம் மற்றும் நம்பகத்தன்மயுடைய ஊடகச் செய்திகள் ஆகியவற்றிலிருந்து மிகவும் கவனமாகச் சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் குறிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது[1].

தமிழ் இனச் சுத்திகரிப்புக் குறிகாட்டி
செயல் எண்ணிக்கை
படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் 8324
படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள் 15912
வன்னியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் 8239
வன்னியில் படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள் 15896
இலங்கை கட்டுப்பாட்டு பகுதிகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் 85
இலங்கை கட்டுப்பாட்டு பகுதிகளில் படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள் 16
இலங்கை கட்டுப்பாட்டு பகுதிகளில் பலவந்தமாய் கடத்தப்பட்டோர் அல்லது காணமல் போனோர் 298
இலங்கைப் படைகளால் கைதானோர் 1771