தத்தா வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுராவின் தத்தர்கள்
கிமு முதலாம் நூற்றாண்டு–கிமு முதலாம் நூற்றாண்டு
தலைநகரம்மதுரா
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
கிமு முதலாம் நூற்றாண்டு
• முடிவு
கிமு முதலாம் நூற்றாண்டு
முந்தையது
பின்னையது
தேவா வம்சம் (சாகேதம்)
இந்தோ கிரேக்க நாடு
மித்திர வம்சம்
வடக்கு சத்திரபதிகள்
இந்தோ சிதியன் பேரரசு
தற்போதைய பகுதிகள்உத்தரப் பிரதேசம், இந்தியா
தத்தா வம்ச மன்னர் இராம தத்தனின் நாணயம்[1]
தத்தா வம்சம் is located in இந்தியா
தத்தா வம்சம்
இந்தியாவில் தத்தா வம்ச தலைநகர் மதுராவின் அமைவிடம்
மன்னர் சிவதத்தனின் நாணயம்

தத்தா வம்சம் (Datta dynasty), இவ்வம்சத்தவர்கள் வட இந்தியாவின் மதுரா மற்றும் அயோத்தி பகுதிகளை கிமு முதலாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தனர்.[2] தத்தா வம்சாத்தவர்கள் தேவா வம்சத்தவர்களை வென்று அயோத்தி பகுதிகளை தங்களது மதுரா இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர். இரண்டாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் மித்திர வம்சத்தினர், தத்தா வம்சத்தவர்களை வென்று மதுரா மற்றும் அயோத்தியை ஆட்சி செய்தனர்.

யவன இராச்சியக் கல்வெட்டுகளின்படி, இந்திய கிரேக்க இராச்சியத்தினர் (கிமு 150 - 50) மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்த போது, அயோத்தி மற்றும் மதுரைவை ஆண்ட தேவா வம்சத்தினர், தத்தா வம்சத்தினர் மற்றும் மித்திர வம்சத்தினர் கிரேக்கரகளுக்கு திறை செலுத்தி சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர்.[3] இந்தோ-கிரேக்க இராச்சியத்தை பின்னர் இந்தோ-சிதியர்கள், வடக்கு சத்திரபதிகள் மற்றும் குசானர்கள் வென்றனர்.

தத்தா வம்ச ஆட்சியாளர்கள்[தொகு]

தத்தா வம்சத்தின் அறியப்பட்ட ஆட்சியாளர்கள்:[4]

  • சேஷ தத்தா
  • இராம தத்தா
  • சிசுசந்திர தத்தா
  • சிவ தத்தா

இதனையும் காண்க[தொகு]

References[தொகு]

  1. Hartel, Herbert (2007) (in English). On The Cusp Of An Era Art In The Pre Kuṣāṇa World. BRILL. பக். 324. https://archive.org/details/OnTheCuspOfAnEraArtInThePreKuaWorldDMSrinivasanEdBrill_201807/page/n329. 
  2. History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE – 100 CE, Sonya Rhie Quintanilla, BRILL, 2007, p.170 [1]
  3. History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE – 100 CE, Sonya Rhie Quintanilla, BRILL, 2007, p.8–10 [2]
  4. Dimensions of Human Cultures in Central India, A. A. Abbasi, Sarup & Sons, 2001, p.145-146 [3]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்தா_வம்சம்&oldid=3847741" இலிருந்து மீள்விக்கப்பட்டது