தட்டையில் ஒரிப்புறத்து பகவதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தட்டையில் ஒரிப்புறத்து பகவதி கோயில் இந்தியாவில், கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் [1] பந்தளம் அருகே உள்ள தட்டையில் [2] என்னும் இடத்தில் உள்ள 1200 ஆண்டுகள் வாய்ந்த பழமையான இந்துக் கோயிலாகும்.[3] மத்திய திருவிதாங்கூரில் உள்ள மிகவும் பிரபலமான பகவதி கோவில்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

துணைத்தெய்வங்கள்[தொகு]

இதன் மூலவர் காளி தேவி ஆவார்.விநாயகர், கிருஷ்ணர், நாக ராஜர், நாக யட்சி, ராட்சசு, யோகேஸ்வரன், யட்சி அம்மா, மதன் சுவாமி ஆகிய துணைத்தெய்வங்கள் இங்கு உள்ளன. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் ஒரு பகுதியாக 'தூக்கம்' பிரசாதம் வழங்கப்படுகிறது.[4]

அமைவிடம்[தொகு]

இக்கோயில் பந்தளத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும், பத்தனம்திட்டாவிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், தேசிய நெடுஞ்சாலை 183A இல் 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ashish (2020-06-12). "Orippurathu Bhagavathy Temple in Kerala - Orippurathu Bhagavathy Temple Pooja Timing, Location". Religious & Pilgrimage Tour Packages. பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  2. "Orippurathu Bhagavathy Temple - Info, Timings, Photos, History". TemplePurohit - Your Spiritual Destination (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  3. "Thattayil Orippurathu Bhagavathi Temple, Pathanamthitta, India Tourist Information". www.touristlink.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  4. "The Hindu : Kerala / Pathanamthitta News : 'Thookkom' held at temple". web.archive.org. பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.

வெளி இணைப்புகள்[தொகு]