தட்டா பானி, கில்கிட் பால்டிஸ்தான்

ஆள்கூறுகள்: 35°28′35″N 74°33′29″E / 35.47642216874622°N 74.55796285777811°E / 35.47642216874622; 74.55796285777811
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தட்டா பானி
تتا پانی
தட்டா பானி கிராமம்
தட்டா பானி கிராமம்
தட்டா பானி is located in Gilgit Baltistan
தட்டா பானி
தட்டா பானி
ஆள்கூறுகள்: 35°28′35″N 74°33′29″E / 35.47642216874622°N 74.55796285777811°E / 35.47642216874622; 74.55796285777811
நாடு பாக்கித்தான்
நிர்வாகப் பிரிவுவடக்கு நிலங்கள்
மாவட்டம்தயமர்
நேர வலயம்ஒசநே+05:00 (பாக்கித்தான் சீர் நேரம்)

தட்டா பானி ( Tatta Pani ) என்பது பாக்கித்தானில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தானின் தயமர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் . இது அப்பகுதியில் கடுமையான நிலச்சரிவு மற்றும் காரகோரம் நெடுஞ்சாலையின் மோசமான பகுதி காரணமாக குறிப்பிடத்தக்கது.

சொற்பிறப்பியல்[தொகு]

தட்டா பானி என்ற பெயர் உள்ளூர் சினா மொழி மற்றும் உருது உருது மொழியிலிருந்து வந்தது. தட்டு அல்லது தட்டா என்றால் சினாவில் சூடான என்றும் உருது மொழியில் பானி என்றால் தண்ணீர் எனவும் பொருள்படும் [1]

சாலை மற்றும் நிலச்சரிவு[தொகு]

நீண்ட மற்றும் பிரபலமான காரகோரம் நெடுஞ்சாலை தட்டா பானி வழியாக செல்கிறது. மேலும் நெடுஞ்சாலையின் இந்த பகுதி "தட்டா பானி சாலை" என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள அழிந்த நிலையிலுள்ள சாலைகள் மற்றும் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகளுக்கு இது குறிப்பிடத்தக்கது. [2] [3] தற்போது அப்பகுதியில் மற்றொரு மாற்று சாலை அமைக்கப்பட்டுள்ளது. [4] இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் போது பல காரணங்களால் தட்டா பானி மற்றும் ராய்கோட் பாலத்தில் போக்குவரத்தில் தடை ஏற்ப்டுகிறதுபடுகிறது.

மக்கள்தொகை[தொகு]

கிராமத்தில் சுமார் 36 பேர் வசிக்கின்றனர். தட்டா பானி மலைப் பகுதியில் கிட்டத்தட்ட 200 பேர் வசிக்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் சிலாசி சினா பேச்சுவழக்கு அதிகம் பேசப்படுகிறது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karakorum Highway's famous "Tata Pani": Natural or Human-induced Disaster?". 3 August 2019.
  2. "Gilgit-Baltistan: Karakoram highway restored at Tata Pani for one-way traffic". 2 August 2021.
  3. "KKH is Still Closed at Tata Pani in Diamer Area Due to Landslides". 2021-07-30.
  4. "KKH alternative route to be built in Tatta Pani area of GB". 18 August 2021.
  5. "Diamir .There are that part of Karakoram Highway is located in Diamer District of Gilgit-Baltistan. Where the same part is considered more frightening and dangerous due to the dangers of more and heavier landslides. - Hunza Tv". 26 February 2021.