தடுப்பணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தடுப்பணை என்பது நீர் ஓடும் ஓடைகளின் குறுக்கே கட்டப்படும் அணைகள் ஆகும். இவை மண்ணரிப்பைக் குறைப்பதற்காகவும் நீரோட்டத்தின் வேகத்தைக் குறைப்பதற்காகவும் கட்டப்படுகின்றன. சிறிய நீர்த்தேக்கங்களையும் இந்தத் தடுப்பணைகள் உருவாக்குகின்றன. இத்தகைய தடுப்பணைகள் பத்து ஏக்கர் அளவில் நீர்ப்பாசன வசதி தரும் சிறிய ஓடைகளின் குறுக்கேயே கட்டப்படுகின்றன.

பி. ராமராஜ்[தொகு]

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான கோம்பையில் நிலத்தடி நீர்மட்டம் உயர 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டிச் சாதனை படைத்துள்ளார்.

தேனி மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கோம்பை கிராமம், மழை மறைவு (மழை பெய்யாத) பகுதியில் உள்ளது.

கோம்பை பேரூராட்சித் தலைவராக கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ராமராஜ், அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மானாவாரி சாகுபடி தவிர, மற்ற காய்கறிகளை சாகுபடி செய்ய, தமிழக அரசுடன் இணைந்து தற்போது வரை சிறியதும், பெரியதுமான நானூறுக்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி சாதனை படைத்துள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் 400 தடுப்பணைகள் கட்டி விவசாயி சாதனை
"http://ta.wikipedia.org/w/index.php?title=தடுப்பணை&oldid=1825970" இருந்து மீள்விக்கப்பட்டது