உள்ளடக்கத்துக்குச் செல்

டெட்ரா அயோடோபென்சீன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெட்ரா அயோடோபென்சீன்கள் (Tetraiodobenzenes) என்பவை C6H2I4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மங்களாகும். இவற்றை நான்கையோடோ பென்சீன்கள் என்ற பெயராலும் அழைக்கலாம். ஒரு பென்சீன் வளையத்தில் நான்கு அயோடின் அணுக்கள் பதிலீடு செய்யப்பட்டிருக்கும் சேர்மங்கள் டெட்ரா அயோடோபென்சீன்கள் எனப்படுகின்றன. அயோடின் அணுக்கள் இடம்பெறும் அமைப்பின் அடிப்படையில் மூன்று வகையான மாற்றியங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.


டெட்ரா அயோடோபென்சீன்கள்
பெயர் 1,2,3,4-டெட்ரா அயோடோபென்சீன் 1,2,3,5-டெட்ரா அயோடோபென்சீன் 1,2,4,5-டெட்ரா அயோடோபென்சீன்
அமைப்பு வாய்ப்பாடு Structural formula of 1,2,3,4-Tetraiodobenene Structural formula of 1,2,3,5-Tetraiodobenene Structural formula of 1,2,4,5-Tetraiodobenene
சிஏஎசு எண் 634-68-4 634-92-4 636-31-7
பப்டெம் பப்கெம் 12465 பப்கெம் 12470 பப்கெம் 12488
மூலக்கூற்று வாய்ப்பாடு C6H2I4
மோலார் நிறை 581,70 கி•மோல்−1
இயற்பியல் நிலை திண்மம்
தோற்றம் வெண் ஊசிகள்[1]
உருகு நிலை 136 °செல்சியசு[2] 148 ° செல்சியசு[2] 249–252 ° செல்சியசு[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Daniell Lewis Mattern: Periodination of Benzene with Periodate/Iodide, in: J. Org. Chem., 1983, 48 (24), S. 4772–4773 (எஆசு:10.1021/jo00172a063; PDF).
  2. 2.0 2.1 Handbook of Data on Common Organic Compounds, S. 466 ([1], p. 466, கூகுள் புத்தகங்களில்).