டெட்ராபென்சைல்சிர்க்கோனியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெட்ராபென்சைல்சிர்க்கோனியம்
இனங்காட்டிகள்
24356-01-2
ChemSpider 10254475
InChI
  • InChI=1S/4C7H7.Zr/c4*1-7-5-3-2-4-6-7;/h4*2-6H,1H2;/q4*-1;+4
    Key: QSLMQGXOMLSFAW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 520121
SMILES
  • [CH2-]C1=CC=CC=C1.[CH2-]C1=CC=CC=C1.[CH2-]C1=CC=CC=C1.[CH2-]C1=CC=CC=C1.[Zr+4]
பண்புகள்
C28H28Zr
வாய்ப்பாட்டு எடை 455.76 g·mol−1
தோற்றம் ஆரஞ்சு நிறத் திண்மம்
அடர்த்தி 1.34-1.39 கி/செ.மீ3[1]
உருகுநிலை 133–134 °C (271–273 °F; 406–407 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டெட்ராபென்சைல்சிர்க்கோனியம் (Tetrabenzylzirconium) என்பது Zr(CH2C6H5)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். கரிம சிர்க்கோனியம் சேர்மமான இது எதிர்காந்தப் பண்பை வெளிப்படுத்துகிறது. கட்டமைப்பில் Zr(IV) நான்கு பென்சைல் ஈந்தணைவிகளுடன் பிணைந்திருக்கிறது. டெட்ராபென்சைல்சிர்க்கோனியம் ஆரஞ்சு நிறத்துடன் ஒளியுணர்திறன் கொண்டு திண்மமாக காணப்படுகிறது. ஐதரோகார்பன் கரைப்பான்களில் டெட்ராபென்சைல்சிர்க்கோனியம் கரையும். ஒலிபீன்களை பலபடியாக்க இது ஒரு வினையூக்கியாக பயன்படுத்தப்படும் முன்னோடிச் சேர்மமாகும்.[2] [3]

கட்டமைப்பு[தொகு]

எக்சுகதிர் படிகவியல் ஆய்வின்படி டெட்ராபென்சைல்சிர்க்கோனியத்தின் கட்டமைப்பு- தெளிவுக்காக ஐதரசன் அணுக்கள் நீக்கப்பட்டுள்ளன.

பென்சைல் ஈந்தணைவிகள் மிகவும் நெகிழ்வானவை என்பதை எக்சுகதிர் படிகவியல் ஆய்வு நிரூபிக்கிறது:ஒரு பல் உருவி நான்கு η2-ஈந்தணைவிகளையும், மற்றொன்று இரண்டு η1- ஈந்தணைவிகளையும், மற்றும் இரண்டு η2-பென்சைல் ஈந்தணைவிகளையும் கொண்டுள்ளன.[1]

தயாரிப்பு[தொகு]

டை எத்தில் ஈதரில் உள்ள சிர்க்கோனியம் டெட்ராகுளோரைடுடன் பென்சைல்மக்னீசியம் குளோரைடை சேற்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக டெட்ராபென்சைல்சிர்க்கோனியம் தயாரிக்கலாம்.[4]

வினைகள்[தொகு]

டெட்ராபென்சைல்சிர்க்கோனியம் ஐதரசன் குளோரைடுடன் சேர்க்கப்படும்போது எளிதாக புரோட்டானாற் பகுப்பு அடைகிறது.

Zr(CH2C6H5)4 + HCl → Zr(CH2C6H5)3Cl + CH3C6H5

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Rong, Yi; Al-Harbi, Ahmed; Parkin, Gerard (2012). "Highly Variable Zr–CH2–Ph Bond Angles in Tetrabenzylzirconium: Analysis of Benzyl Ligand Coordination Modes". Organometallics 31 (23): 8208–8217. doi:10.1021/om300820b. 
  2. Tshuva, Edit Y.; Goldberg, Israel; Kol, Moshe (2000). "Isospecific Living Polymerization of 1-Hexene by a Readily Available Nonmetallocene C2-Symmetrical Zirconium Catalyst". Journal of the American Chemical Society 122 (43): 10706–10707. doi:10.1021/ja001219g. 
  3. Zucchini, U.; Albizzati, E.; Giannini, U. (1971). "Synthesis and Properties of Some Titanium and Zirconium Benzyl Derivatives". Journal of Organometallic Chemistry 26 (3): 357–372. doi:10.1016/S0022-328X(00)82618-2. 
  4. Mashima, Kazushi; Tsurugi, Hatato (2013). "Tetrabenzylzirconium". Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rn01555. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0471936237.