டுரோய்னா சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டுரோய்னா சண்டை
பகுதி சிசிலியப் படையெடுப்பின்
Troina, sicily.jpg
இரண்டாம் உலகப் போரின் போது டுரோய்னா நகரம்
நாள் ஜூலை 31, 1943 – ஆஜஸ்ட் 6, 1943
இடம் டுரோய்னா, சிசிலி
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனியின் கொடி ஜெர்மனி
இத்தாலியின் கொடி இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஜார்ஜ் பேட்டன்

டுரோய்னா சண்டை (Battle of Troina) என்பது இரண்டாம் உலகப் போரின் போது சிசிலியில் நடைபெற்ற ஒரு சண்டை. சிசிலியப் படையெடுப்பின் ஒரு பகுதியான இதில் அமெரிக்கப் படைகள் ஜெர்மானியப் படைகளை முறியடித்து டுரோய்னா நகரைக் கைப்பற்றின. ஜூலை 31 - ஆகஸ்ட் 6, 1943 காலகட்டத்தில் நிகழ்ந்த இச்சண்டையில் அமெரிக்க 7வது ஆர்மியின் படைப்பிரிவுகள் எட்னா அரண்கோட்டின் ஒரு பகுதியான டுரோய்னா நகர் மற்றும் அதை சுற்றுப்புறங்களைத் தாக்கியது. கரடுமுரடணான நிலவியல் அமைப்பும், பலமான பாதுகாவல் நிலைகளும் அச்சுப் படைகளுக்கு சாதகமாக இருந்தன. ஏழு நாட்கள் கடுமையான சண்டைக்குப் பின் டுரோய்னா நகரம் அமெரிக்கப் படைகளால் கைப்பற்றப்பட்டது

"http://ta.wikipedia.org/w/index.php?title=டுரோய்னா_சண்டை&oldid=1360565" இருந்து மீள்விக்கப்பட்டது