டி. ஏ. கோபிநாத ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. ஏ. கோபிநாத ராவ் (T. A. Gopinatha Rao) (1872-1919) இந்தியத் தொல்லியல் துறையின் தொல்பொருள் ஆய்வாளர் மற்றும் கல்வெட்டு நிபுணராக பணியாற்றியவராவார். எபிகிராபியா இண்டிகா என்னும் இதழில் தொடர்ந்து பங்களித்து வந்தார். திருவிதாங்கூர் தொல்லியல் துறையின் முதல் கண்காணிப்பாளராக 1908 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். [1] இவருடைய பதவி காலத்தில், திருவிதாங்கூர் தொல்லியல் தொடரின் முதல் மற்றும் இரண்டாம் தொகுதிகளைத் தொகுத்தார்.[1]

மிகவும் முக்கியமான பழமை வாய்ந்த குடிமல்லம் லிங்கம் இவரால் கண்டறியப்பட்டு முதன்முதலில் வெளியிடப்பட்டது. இந்த லிங்கம் குறித்தத் தகவல்கள், இவருடைய 'இந்து உருவப்படக் கூறுகள் 1914 (சட்ட அச்சகம், மெட்ராசு)' என்னும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.[2]

இதழ்கள்[தொகு]

  • "Painting in Ancient India", Modern Review, 1918, |volume=XXIV

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Cumming, John (1939). Revealing India's Past: a Record of Archaeological Conservation and Exploration in India and Beyond. Genesis Publishing Ltd. பக். 297. 
  2. online text

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஏ._கோபிநாத_ராவ்&oldid=3829409" இலிருந்து மீள்விக்கப்பட்டது