டான்டே அலிகியேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டான்டே அலிகியேரி

டான்டே அலிகியேரி, Giotto ஆல் வரையப்பட்ட இவ்வோவியம் புளொரன்சில் உள்ள பார்கெலோ மாளிகைச் சிற்றாலயத்தில் உள்ளது. டாண்டேயின் மிகப் பழமையான இந்த ஓவியம் அவர் வாழ்ந்த காலத்தில் வரையப்பட்டது.

டான்டே அலிகியேரி என அழைக்கப்படும் துரான்டே டெக்லி அலிகியேரி (மே/ஜூன் 1265 - செப்டெம்பர் 14, 1321) மத்திய காலத்துப் புளோரன்சைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். இவருடைய முக்கியமான ஆக்கமான "டிவினா காமெடியா" இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட மிகச் சிறந்த ஆக்கமும், உலக இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றுமாகும். இத்தாலிய மொழியில் இவர் மகா கவிஞனாகப் போற்றப்படுகின்றார். டான்டே, பெட்ராக், பொக்காச்சியோ ஆகிய மூவரும், "மூன்று ஊற்றுக்கள்" (the three fountains) அல்லது"மும்முடிகள்" (the three crowns) எனக் குறிப்பிடப்படுகின்றனர். டான்டே இத்தாலிய மொழியின் தந்தை எனவும் அழைக்கப்படுவது உண்டு. இவரைப்பற்றிய முதல் நூல் ஜொவானி பொக்காச்சியோவால் எழுதப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டான்டே_அலிகியேரி&oldid=1351095" இருந்து மீள்விக்கப்பட்டது