ஜோர்டன்-போல்யா எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டுருவியலில் 480 சமச்சீர்களைக்கொண்ட ஒரு மரத்தின் கோட்டுரு. இட மேற்புறக் கணுவின் இரு துணைக்கணுக்களை 2! = 2 வழிகளிலும், நடு மேற்புறக் கணுவின் 2 துணைக்கணுக்களை 2! = 2 வழிகளும் வல மேற்புறக் கணுவின் 5 துணைக்கணுக்களை 5! = 120 வழிகளிலும் வரிசைமாற்றஞ் செய்யலாம். எனவே மரத்தின் மொத்த சமச்சீர்களின் எண்ணிக்கை = 2 · 2 · 120 = 480

கணிதத்தில் ஜோர்டன்-போல்யா எண்கள் (Jordan–Pólya numbers) என்பவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர் பெருக்கங்களின் பெருக்கற்பலனாகக் கிடைக்கக்கூடிய எண்களாகும். பெருக்கப்படும் தொடர்பெருக்க எண்கள் வெவ்வேறானவையானவயாக இருக்க வேண்டுமென்பதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு ஜோர்டன்-போல்யா எண்ணாகும். கோட்டுருவியலின் ஒவ்வொரு மரமும் ஏதாவதொரு ஜோர்டான்-போல்யா எண்ணிக்கையில் சமச்சீர்கள் கொண்டிருக்கும்; ஆகவே ஜோர்டன்-போல்யா எண்கள் ஒவ்வொன்றும், ஒரு மரத்தின் ஒரு 'தன்னமைவிய குலத்தின்' வரிசையாக அமையும். பிரெஞ்சு கணிதவியலாளர் "ஜோர்டன்" மற்றும் ஹங்கேரி-அமெரிக்கக் கணிதவியலாளர் போல்யா ஆகிய இருவரும் கோட்டுருவியல் மரங்களின் சமச்சீர்கள் குறித்த ஆய்வில் இவ்வெண்களைப் பற்றி எழுதியதால், இவ்வெண்கள் அவ்விருவரின் பெயரால் அழைக்கப்படுகின்றன.[1]:{{{3}}}[2]:{{{3}}}

தொடர்வரிசையும் வளர்விகிதமும்[தொகு]

ஜோர்டன்-போல்யா எண்களின் தொடர்வரிசை::[3]:{{{3}}}

1, 2, 4, 6, 8, 12, 16, 24, 32, 36, 48, 64, 72, 96, 120, 128, 144, 192, 216, 240, 256, ... (OEIS-இல் வரிசை A001013)


இவ்வெண்கள், அனைத்து தொடர்பெருக்கங்களின் பெருக்கலைப் பொறுத்த அடைவு கணமாகவுள்ளன. வது ஜோர்டன்-போல்ய எண்ணானது, இன் எந்தவொரு பல்லுறுப்புக்கோவையை விடவும் வேகமாகவும் ஆனால், இன் எந்தவொரு அடுக்கேற்றத்தைவிடவும் மெதுவாகவும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு மற்றும் போதுமானவளவு பெரிதான ஒவ்வொரு ( ஐ பொறுத்து) வரையிலான ஜோர்டன்-போல்யா எண் கீழுள்ள சமனிலியை நிறைவு செய்யும்.[4]:{{{3}}}

சிறிய எண்களின் தொடர்பெருக்கங்களின் பெருக்கலாகவுள்ள தொடர்பெருக்கங்கள்[தொகு]

2 ஐத் தவிர மற்ற ஜோர்டன்-போல்யா எண் ஒவ்வொன்றுக்கும் அதன் தொடர்பெருக்கத்தை, அதனைவிடச் சிறிய எண்களின் தொடர்பெருக்கங்களின் பெருக்கற்பலனாக எழுக்கூடிய பண்பு உண்டு.

அதாவது, எனப் பிரித்து மீண்டும் இதிலுள்ள காரணி ஐ மேலும் சிறிய தொடர்பெருக்கங்களின் பெருக்கலாக எழுதலாம்.

எடுத்துக்காட்டு:
8! = 8 . 7! = 2! 2! 2! 7!. = 2!3 7!.

இப்பண்பு குறித்த நிறுவப்படாத ஊகம்:

2 ஐத் தவிர்த்த பிற ஜோர்டன்-போல்யா எண்களே சிறிய எண்களின் தொடர்பெருக்கங்களின் பெருக்கலாக எழுதக்கூடிய எண்களாகும். (மேலும் 9, 10 ஆகிய இரு எண்களுக்கும் இக்கூற்றில் விலக்கப்படுகின்றன - ).
என்பதிலுள்ள ஐ மீண்டும் தொடர்பெருக்கங்களின் பெருக்கலாக எழுதும் விதத்தைத் தவிர வேறொரு விதமாகவும் எழுதப்படக்கூடிய எண் 16. இது ஒரு ஜோர்டன்-போல்யா எண்ணுங்கூட:
(16 ஒரு ஜோர்டன்-போல்யா எண்),
.[3]:{{{3}}}[5]:{{{3}}}

மேற்கோள்கள்[தொகு]

  1. Jordan, Camille (1869), "Sur les assemblages de lignes", Journal für die reine und angewandte Mathematik, 1869 (70): 185–190, doi:10.1515/crll.1869.70.185, S2CID 119829832
  2. Pólya, George (1937), "Kombinatorische Anzahlbestimmungen für Gruppen, Graphen und chemische Verbindungen", Acta Mathematica, 68: 145–254, doi:10.1007/BF02546665, S2CID 121878844
  3. 3.0 3.1 Sloane, N. J. A. (ed.), "Sequence A001013 (Jordan-Polya numbers: products of factorial numbers)", நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம், நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை
  4. De Koninck, Jean-Marie; Doyon, Nicolas; Razafindrasoanaivolala, A. Arthur Bonkli; Verreault, William (2020), "Bounds for the counting function of the Jordan-Pólya numbers", Archivum Mathematicum, 56 (3): 141–152, arXiv:2107.09114, doi:10.5817/am2020-3-141, MR 4156441, S2CID 226661345
  5. Guy, Richard K. (2004), "B23: Equal products of factorials", Unsolved problems in number theory, Problem Books in Mathematics, vol. 1 (3rd ed.), New York: Springer-Verlag, p. 123, doi:10.1007/978-0-387-26677-0, ISBN 0-387-20860-7, MR 2076335
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்டன்-போல்யா_எண்&oldid=3923638" இலிருந்து மீள்விக்கப்பட்டது