உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோனாதன் ஐவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் ஜோனதன் ஐவ்
Sir Jonathan Ive
ஜொனத்தன் ஐவ், ஏப்ரல் 2009
பிறப்புஜொனத்தன் பவுல் ஐவ்[1]
பெப்ரவரி 27, 1967 (1967-02-27) (அகவை 57)
சிங்போர்ட், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
மற்ற பெயர்கள்ஜொனி ஐவ்
படித்த கல்வி நிறுவனங்கள்நியூகாசில் பல்தொழினுடக் கழகம் (இ.மா.)[1]
பணிதலைமை வடிவமைப்பாளர் (ஆப்பிள் நிறுவனம்)
பணியகம்
அறியப்படுவதுவடிவமைப்பாளர் (ஆப்பிள் நிறுவனம்)
வாழ்க்கைத்
துணை
எதர் பெக் (தி. 1987)
விருதுகள்
  • Royal Designers for Industry (2003)
  • Order of the British Empire (2006)
  • HonFREng (2006)[2]
  • Knight Commander (2012)[1]
வலைத்தளம்
www.apple.com/pr/bios/jonathan-ive.html

ஜோனாதன் ஐவ் (Jonathan Ive, பிறப்பு: பிப்ரவரி 27, 1967[3]) இங்கிலாந்தைச் சேர்ந்த தொழில் வடிவமைப்பாளர் ஆவார். தற்பொழுது தலைமை வடிவமைப்பு அதிகாரியாக ஆப்பிள் நிறுவனத்தில் உள்ளார். மேலும் இலண்டனில் உள்ள ராயல் கலைக் கல்லூரியின் தலைவர் பதவியில் உள்ளார்.[4][5] இவர் மேற்பார்வையின் கீழ் ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்துறை வடிவமைப்பு குழு உள்ளது. மேலும் இவர் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மனித இடைமுக மென்பொருள் அணி நிறுவனம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. ஐவ் தான் ஆப்பிள் நிறுவனத்தின் பல முன்னணி தயாரிப்புகளான மேக்புக் ப்ரோ, ஐமேக், மேக்புக் ஏர், மேக் மினி, ஐபாட், ஐபாட் டச், ஐபோன், ஐபேட் , ஐபேட் மினி, ஆப்பிள் கடிகாரம், ஐஓஏ ஸ் ஆகியவற்றின் வடிவமைப்பாளர். ஸ்டீவ் ஜாப்ஸ் இவரை ஆப்பிள் நிறுவனத்தின் ஆன்மீக பங்குதாரராகக் கருதினார். மேலும் பார்ச்சூன் நாளிதழ் 2010 ல் ஆப்பிள் வடிவமைப்பின் கருக்களில் ஐவ் வின் வடிவமைப்புகள் ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டும் பாதை அமைத்து தரவில்லை மாறாக வடிவமைப்பை இன்னும் அகலமாக்கி உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளது. மேலும் ஐவ் தான் பல ஆப்பிள் தயாரிப்பு வீடியோக்களில் கதை சொல்பவராக உள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

ஐவ் பிறந்தது சிங்க்போர்ட், லண்டன். அவரது தந்தை மிடில்செக்ஸ் பாலிடெக்னிக்கில் சொற்பொழிவாற்றிய ஒரு தட்டான். மேலும் ஐவ் தனது தந்தையை பற்றி குறிப்பிடும் போது அவர் ஒரு அற்புதமான கைவினைஞர். அவரது கிறிஸ்துமஸ் பரிசு என்னவெனில் ஒரு நாள் அவருடன் கல்லூரி பட்டறையில் அவரது பணியின்போது உடன் இருப்பது, ஏனெனில் கிறிஸ்துமஸ் இடைவெளியின் போது யாரும் இருக்க மாட்டார்கள், அப்போது நான் என் கனவுகளை அங்கே உருவாக்கிக் கொள்ளலாம். ஐவ் சிங்க்போர்ட் பள்ளியிலும், ஸ்டாபோர்ட்டிலுள்ள வால்டன் உயர் பள்ளியிலும் பயின்றார். அவரது பள்ளிப் படிப்பின் போது, ஐவ் கார்களின் மீது பேரார்வம் கொண்டிருந்தார். அதுவே பின்னாளில் அவரை வடிவமைப்பாளராக மாற்றியது. அவர் பட்டப்படிப்பை வால்டன்லில் முடித்த பிறகு, ராயல் கலைக் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவை போல் லண்டனில் கார் வடிவமைப்பு படிக்க விரும்பினார். பிறகு அவர் அங்கு நல்லதொரு கற்கும் சூழ்நிலையை உணர்ந்தார். அங்கு உள்ள மாணவர்கள் அனைவரும் கார்களில் வரும் சத்தத்தை வரைவதில் உணர்ந்தார்.

ஐவ் புதுகாஸ்டில் பாலிடெக்னிக்கில் தொழில்துறை வடிவமைப்பை கற்றார். அது தற்போது நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகமாக உள்ளது. மாணவர்கள் உருவாக்கி உள்ள படைப்புகள் குறிப்பாக கேள்விச்சாதனம் வடிவமைப்பு போன்றவை லண்டன் வடிவமைப்பு அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஐவ் நினைப்பதை வரைந்து வடிவமைத்துக் காட்டுவதில் ஆர்வமாக இருந்தார். இளம் வயதுக்காரராக இருந்ததால் புதுகாஸ்டிலை விட்டுச் சென்ற பிறகு அவருக்கு எத்துறையில் நிபுணத்துவம் பெறுவது என்று தீர்மானமாக முடுவு செய்ய முடியவில்லை. பல்வேறு வடிவமைப்பு நிபுணர்களைச் சந்தித்த பிறகு இவர் தயாரிப்பு வடிவமைப்பில் ஈர்க்கப்பட்டார். லண்டன் வடிவமைப்பு நிறுவனத்தில் இவருக்கு வேலை கிடைத்தது.இது ராபர்ட்ஸ் வீவர் குழுவினுடையது. மேலும் ஐவ்வின் கல்லூரி ஆதரவாளரும் கூட. ஐவ் கலை பட்டபடிப்பில் 1989 ல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

ஐவ் ஆப்பிள் மாக் கண்டுபிடித்து பற்றி கூறும் போது மாணவராக இருந்த காலத்தில் "கணினிகளுடன் ஒரு உண்மையான பிரச்சனை" ஏற்பட்டு அதுவே ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மேலும் அவர் தொழில்நுட்பத்தில் திறமையற்றவராக உணர்ந்த அந்தத் தருணத்தில் தான் ஆப்பிள் பயனர் அனுபவம் கணினி வடிவமைப்பில் இருந்து விலகி இருந்ததாக அவர் கருதினார் [6]. மேலும் ஐவ் உள்ளுணர்வு சுட்டி உந்துதல் அமைப்பில் குறிப்பாக ஈர்க்கப்பட்டார்[7].

வேலை

[தொகு]

ராபர்ட் வீவர் உடன் ஒரு வருடத்தைக் கழித்த பிறகு, ஐவ் புதியதாகத் தொடங்கப்பட்ட லண்டன் வடிவமைப்பு நிறுவனமான டான்ஜரின்-ல் பணியில் சேர்ந்தார். அது ஹோச்டன் சதுக்கத்தில் அமைந்திருந்தது. அங்கு தான் ஐவ் பல்வகையான பொருட்களை வடிவமைத்தார். அதில் மைக்ரோவேவ் அடுப்பு, பல்துலக்கி[7] போன்றவையும் அடங்கும். ஒரு கட்டத்தில் ஐவ் பொறுமை இழந்தார், ஏனனில் அவர் ஐடியல் ஸ்டாண்டர்ட் வாடிக்கையாளருக்காக வடிவமைத்த கழிப்பறை, பைடேட் மற்றும் மடு போன்றவை மிகவும் விலை உயர்ந்ததாகவும், மிக நவீனமாக இருந்ததாக காரணங்களைக் காட்டி அவர்களால் நிராகரிக்கப்பட்டது[7][8]. ஐவ் விரும்பாத, அவரது கொள்கைகளை ஏற்காத ஒரு வாடிக்கையாளரிடம் பணியாற்றுவதால் மகிழ்ச்சியற்று இருந்தார். ஆப்பிள் நிறுவனமும் ஒரு டான்ஜரின்னின் வாடிக்கையாளர் தான். ஐவ் ஒரு ஆலோசகராக ஆப்பிள் நிறுவனத்திற்கு முதல் நிலை பவர்புக் கணிணிக்கு வடிவமைப்பு தந்தார். ஆப்பிள் நிறுவனம் ஐவ்'வை முழு நேர ஊழியராகப் பணியமர்த்த இரண்டு வருடமாக முயன்று தோற்றது[7].

ஐவ் ஆப்பிளின் தலைமை தொழில்துறை வடிவமைப்பு ஆலோசகராக ராபர்ட் ப்ருனர் உடன் பணி புரிந்தார். பின் நாளில் 1992 முதல் முழு நேரப் பணியாளராகப் பணியமர்த்தப்பட்டார். அதுமட்டுமல்லாது இரண்டாம் தலைமுறை நியூட்டன், செய்தி திண்டு 110, இவற்றை வடிவமைத்தார். அதுவே ஐவ்வை தைபெய்க்கு முதல் முறையாக அழைத்துச் சென்றது. ஜாப்ஸின் வருகைக்குப் பிறகு, ஐவ் கிட்டத்தட்ட பணியை விட்டு விலகும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் ஐவ்வின் மேலதிகாரி ஜான் ருபின்ஸ்டேன் ஆப்பிள் ஒரு புதிய மறுமலர்ச்சியே ஏற்படுத்த போகின்றது என்று எடுத்துக் கூறிய பிறகு அம்முடிவைக் கைவிட்டார்.

பதவி உயர்வுகள்

[தொகு]

1997 ல் ஜாப்ஸின் வருகைக்குப் பிறகு, ஐவ் மூத்த துணைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். அதிலிருந்து ஐவ்வின் தொழில்துறை வடிவமைப்பு குழு நிறுவனத்தின் பெரும்பாலான குறிப்பிடத்தக்க வன்பொருட்களை வெற்றிகரமாக உருவாக்கினார். ஐவ்வின் முதல் வேலையே ஐமாக் கணினி வடிவமைப்பு தான். அது தான் பின்னாளில் ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் போன்ற பல வடிவமைப்புகளுக்கு வழி வகுத்தது. ஜாப்ஸ் தான் வடிவமைப்பைப் பிரதானமாக்கினார். ஐவ் அதன் வலி நடந்து நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பிரபலமான தயாரிப்புகள் பிழையில்லாமல் செயல்படவும், அழகாகவும் வடிவமைத்தார். ஐவ் ஜாப்ஸ் உடன் 2014 ல் பணிபுரிந்த போது தங்களது பணி அனுபவங்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். "நாங்கள் இருவரும் பொருட்களைப் பார்த்த போது, என்ன கண்டோமோ, இருவருமே அதையே உணர்ந்தோம். மேலும் நாங்கள் ஒரே கேள்விகளையே கேட்டுக் கொண்டோம், அதே ஆர்வமும் எங்கள் இருவரிடமும் இருந்தது". ஐவ் ஜாப்ஸ்ஐ மிகுந்த புத்திசாலி, தைரியமானவர் மற்றும் உயர்வானவரும் கூட என்று குறிப்பிடுகிறார்.

1961 முதல் 1995 வரை ப்ரானில் தலைமை வடிவமைப்பாளராக இருந்த டைட்டெர் ராம்ஸ்ஐ, ஐவ்வின் வேலை மற்றும் கொள்கைகள் ஈர்த்தன. கேரி ஹுச்வித் எடுத்த ஆவணப் படமான "ஆப்ஜெக்ட்டிபியட்" ல் குறிப்பிடும் போது "ராம்ஸின் 10 கொள்கைகளைப் பின்பற்றிப் பொருட்களை வடிவமைப்பதில் ஆப்பிள் போன்ற ஒரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய கம்பெனிகள் தான் உள்ளன" என்று கூறுகிறார்.

ஐவ் ஒருவர் தான் ஆப்பிள் நிறுவனத்தில் சொந்தமாகத் தனியாக ஆய்வுக்கூடத்தை வைத்துள்ளார். அதில் அவர் நியமித்த தனது வடிவமைப்புக் குழுவுடன் தனது வேலை மற்றும் குழுவையும் மேற்பார்வை செய்து கொள்வார். ஐவ்வின் முக்கிய குழுவில் பிரிட்டன், அமெரிக்க, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 பேர் உள்ளனர். இவர்கள் ஐவ்வுடன் 20 ஆண்டு காலம் சேர்ந்து பணியில் உள்ளவர்கள். ஐவ்வின் முக்கிய குழுவில் உள்ளவர்கள் மற்றும் ஆப்பிளின் உயர் அதிகாரிகள் மட்டும் தான் ஐவ்வின் ஆய்வகத்திற்குள் நுழைய அனுமதி உண்டு. ஐவ் தனது பிள்ளைகளை கூட ஆய்வகத்திற்குள் நுழைய அனுமதித்தது கிடையாது. ஏனென்றால் அதில் தான் வடிவமைப்புக் குழு வேலை செய்து கொண்டிருக்கும் அனைத்துக் கருத்துருக்களும், மூல முன் மாதிரிகளும் உள்ளன. "ஐவ்வின் ஆய்வுக்கூடத்தில் போம் கட்டிங் எந்திரமும், அச்சு எந்திரமும் உள்ளது, வெளி ஆட்கள் ஆய்வுக்கூடத்தில் உள்ளவற்றை அறியா வண்ணம் ஆய்வுக்கூட சன்னல்கள் கருப்பு நிற பிலிம்களால் மறைக்கபட்டிருக்கும். மேலும் தனக்கு அடுத்ததாக ஐவ்வுக்கு தான் ஆப்பிள் நிறுவனத்தில் அனைத்து அதிகாரமும் உள்ளதாக" ஜாப்ஸின் வாழ்கை வரலாற்றுப் புத்தகத்தில் ஜாப்ஸ் கூறியுள்ளார்.

அக்டோபர் 29, 2012ல் ஆப்பிள் இவ்வாறு அறிவித்தது "இனிமேல் ஐவ்வின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மனித இடைமுக துறையைத் தனது தலைமைத் தொழில்துறை வடிவமைப்பு பதவியுடன் சேர்த்துக் கவனித்துக் கொள்வார்". மேலும் ஐஒஸ்7 அறிவித்த போது ஐவ்வை தலைமைப் பதவியிலிருந்து மூத்த துணைத் தலைவர் பதவிக்கு உயர்த்தியதாக ஆப்பிள் நிறுவனம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தது.

ஐவ்வின் வரலாற்றுப் புத்தகத்தை எழுதிய லியன்டர் கானே வால் 2013 கடைசியில் புத்தகம் திட்டமிட்டபடி வெளியிடப்பட்டது. இவர் தான் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் வடிவமைப்பாளர்களையும், நிர்வாகிகளையும் பேட்டி கண்டு தனது புத்தகமான "ஜானி ஐவ்: ஆப்பிள் நிறுவனத்தின் மிகச்சிறந்த சாதனங்களை வடிவமைத்த மேதை" புத்தகத்தில் பதிப்பித்தார்.

மார்ச் 2014ல் டைம் நாளிதழ் ஐவ்வின் பேட்டியை வெளியிட்டது, அதில் ஐவ் ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் விவரிக்கிறார்.

நாம் தற்போது குறிப்பிடத்தகுந்த நேரத்தின் ஆரம்பத்தில் இருக்கிறோம். இந்நேரத்தில் தான் பல குறிப்பிடத்தகுந்த சாதனங்கள் உருவாக்கி கொண்டிருக்கிறோம். நீங்கள் தொழில்நுட்பத்தைப் பற்றி நினைக்கும் போது, எது நம்மை இதுவரைக்கும் செய்ய வைத்தது, எது நம்மை எதிர்காலத்தில் செய்ய வைக்க போகிறது. நாம் எந்த ஒரு எல்லையையும் நெருங்க வில்லை, இது இன்னும் புதியது., ஆப்பிள் நிறுவனத்தில் நமது அறியாமையை அறியும் போது கிட்டத்தட்ட ஒரு சந்தோஷம் நமக்கு பின்பு தான் உணர்கிறோம், "ஆஹா, நாம் இதைக் கற்கப் போகிறோம், மேலும் இதை ஒரு நேரத்தில் முடித்து விடுவோம், நாம் உண்மையாக என்ன இருக்கிறது என்பதை அறிய போகிறோம் மேலும் நாம் அதில் சாதிக்கவும் போகிறோம்". ஆப்பிள் ஒரு நிறைவற்ற நிறுவனம், ஒரு மிகப்பெரிய மக்கள் தொகை போல. ஆனால் எங்களிடம் ஒரு தனித்துவம் உள்ளது. அது என்னவெனில் நாங்கள் என்ன செய்கிறோமோ அதைப் பற்றி முன் வாய்மொழி மற்றும் ஒரு இயற்கையான புரிதல் கொண்டுள்ளோம், நாங்கள் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்று. நாங்கள் எங்களுக்குள் ஒரே மதிப்புகளைப் பகிர்ந்துள்ளோம்.

அதே பேட்டியில், ஐவ் தனது மிகச்சிறந்த பணி இனி தான் வர போகிறது மேலும் ஐவ் தன்னை ஒரு சாதனங்களை உருவாக்குபவராகக் காட்டிக் கொள்ள விரும்புகிறார், ஒரு வடிவமைப்பாளாராக அல்ல. ஐவ் தன் கைவினை யோசனை மீள் எழுச்சிக்கு உதவும் என நம்புகிறார்.

ஆப்பிள் நிறுவனம் ஐவ்வை தலைமை வடிவமைப்பு அதிகாரி என்ற புதிய பதவிக்கு உயர்த்தியது. டிம் குக் மற்றும் லூக்க மேஸ்திரி உடன் சேர்த்து ஐவ் மட்டும் தான் ஒரே சீ-நிலை பணியாளர்.

சமூகப் பணி

[தொகு]

ஐவ் தொண்டு காரணங்களுக்காகச் சாதனங்களை வடிவமைத்துள்ளார், அதில் லேக்க கேமரா ஏலத்தில் விடப்பட்ட போது அதிக தொகை கிடைத்தது, அதுவே உலக சாதனையாகவும் தொகுக்கப்பட்டது. மேலும் எய்ட்ஸ் தொண்டுக்காக வடிவமைக்கப்பட்ட ஜெய்கர்-லீ கல்டுரே கடிகாரம் உலகத்தில் மூன்று தான் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 IVE, Sir Jonathan (Paul). Who's Who. Vol. 2015 (online ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ed.). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc.
  2. "List of Fellows of the Royal Academy of Engineering". Archived from the original on 2016-06-08. பார்க்கப்பட்ட நாள் 2015-07-27.
  3. Sam Colt (24 July 2014). The Fabulous Life Of Sir Jony Ive, The Genius Behind Apple's Design http://www.businessinsider.com/the-fabulous-life-of-sir-jony-ive-2014-7?op=1 Business Insider. Retrieved July 16 2015.
  4. Lovejoy, Ben (2017-05-25). "Jony Ive appointed chancellor of 'the world's best design school' the Royal College of Art". 9to5Mac. பார்க்கப்பட்ட நாள் 2017-05-26.
  5. "Sir Jony Ive has been appointed chancellor of the world's number 1 art school" (in en). Business Insider. http://www.businessinsider.com/jony-ive-apples-chief-design-officer-appointed-chancellor-of-royal-college-of-art-2017-5?r=UK&IR=T. 
  6. "Jonathan Ive". Design Museum. பார்க்கப்பட்ட நாள் 2 January 2012.
  7. 7.0 7.1 7.2 7.3 John Arlidge (17 March 2014). "Jonathan Ive Designs Tomorrow". டைம். Time Inc.
  8. Seth Fiegerman (6 November 2013). "10 Things You Didn't Know About Apple Design Chief Jony Ive". Mashable. Mashable. பார்க்கப்பட்ட நாள் 7 November 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோனாதன்_ஐவ்&oldid=3573462" இலிருந்து மீள்விக்கப்பட்டது