ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா João Bernardo Vieira |
|
|
கினி-பிசாவு நாட்டுத் தலைவர்
|
|
|---|---|
| பதவியில் 1 அக்டோபர் 2005 – 2 மார்ச் 2009 |
|
| பிரதமர் | கார்லொஸ் ஜூனியோர் அரிசுடிடெசு கோமசு மார்ட்டீனோ காபி கார்லொஸ் கொரெயா கார்லொஸ் ஜூனியோர் |
| முன்னவர் | என்றிக் ரோசா |
| பதவியில் 16 மே 1984 – 7 மே 1999 |
|
| முன்னவர் | கார்மன் பெரெய்ரா |
| பின்வந்தவர் | அன்சுமானே மானே |
| பதவியில் 14 நவம்பர் 1980 – 14 மே 1984 |
|
| பிரதமர் | விக்டர் மரியா |
| முன்னவர் | லூயிஸ் கப்ரால் |
| பின்வந்தவர் | கார்மன் பெரெய்ரா |
|
கினி-பிசாவு பிரதமர்
|
|
| பதவியில் 28 செப்டம்பர் 1978 – 14 நவம்பர் 1980 |
|
| தலைவர் | லூயிஸ் கப்ரால் |
| முன்னவர் | கான்சுடண்டீனோ டெய்க்செய்ரா |
| பின்வந்தவர் | விக்டர் மரியா |
| அரசியல் கட்சி | சுயேட்சை அரசியல்வாதி |
|
|
|
| பிறப்பு | ஏப்ரல் 27, 1939 பிசாவு, போர்த்துக்கீச கினி |
| இறப்பு | மார்ச்சு 02 2009 (அகவை 69) பிசாவு, கினி-பிசாவு |
ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா (João Bernardo "Nino" Vieira, ஏப்ரல் 27, 1939 - மார்ச் 2, 2009) கினி-பிசாவு நாட்டின் தலைவராக 2005 அக்டோபர் 1 முதல் 2009 இல் அவர் படுகொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்ந்தவர். முன்னராக 1980 முதல் 1999 வரை இவர் கினி-பிசாவு நாட்டின் தலவராக இருந்து உள்நாட்டுப் போரின் பின்னர் தனது பதவியை இழந்திருந்தார். 2005 இ மீண்டும் அரசியலில் நுழைந்து அவ்வாண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2009 மார்ச் 2 ஆம் நாள் இவரை எதிர்த்த இராணுவக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் கினி-பிசாவு நாட்டின் இராணுவத் தளபதி பட்டிசுட்டா வாய் என்பவர் குண்டுவெடிப்பு ஒன்றின் போது கொல்லப்பட்டார்[1].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Guinea-Bissau president assassinated by military: official", AFP, 2 March 2009