ஜெ. மீராமொஹிதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெ. மீராமொஹிதீன்
பிறப்புஜனவரி 28, 1950
கலதெனிய, கண்டி
பணியகம்அரசுப்பணி

ஜெய்லாப்தீன் மீராமொஹிதீன் (பிறப்பு: ஜனவரி 28, 1950) ஒரு ஈழத்து எழுத்தாளரும், பேச்சாளருமாவார். அச்சு ஊடகங்களைவிட இலத்திரனியல் ஊடகங்களில் இவரின் பங்களிப்பு அதிகம்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கண்டி மாவட்டம், பாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவில் கலதெனிய கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த ஜெய்லாப்தீன், கதீஜா உம்மா தம்பதியினரின் மூத்த புதல்வராகப் பிறந்த மீராமொஹிதீன் க/ ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்பு மகரகமை கபூரியா அரபுக்கல்லூரியில் பயின்று மௌலவி பட்டத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றித் தற்போது ஓய்வுபெற்றுள்ளார். 1984இல் முஸ்லிம்சமய கலாசார திணைக்களத்தில் ஆராய்ச்சி உத்தியோகத்தராகப் பதவியில் இணைந்து படிப்படியாகப் பதவி உயர்வுகளைப் பெற்ற இவர்: உதவிப் பணிப்பாளர் பதவிக்காக இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட எழுத்துப் பரீட்சையில் முதலாமிடத்தைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

எழுத்துத்துறையில்[தொகு]

இவரின் கன்னி ஆக்கம் 1985ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில் இடம்பெற்றது. 'கல்வித் துறையில் முஸ்லிம்களின் எதிர்காலம் என்ன?' எனும் ஆய்வுக் கட்டுரை அது. தொடர்ந்து நூற்றுஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ளார். அவைகள் அவ்வப்போது இலங்கையின் தேசியப் பத்திரிகைகளிலும், இலங்கை வானொலியிலும் இடம்பெற்றுள்ளன.

சொற்பொழிவுகள்[தொகு]

இலங்கை வானொலி, ஸ்ரீலங்கா ரூபவாஹினி, ஸ்ரீலங்கா சுயாதீன தொலைக்காட்சி ஆகிய இலத்திரனியல் ஊடகங்களில்; இவரின் பல செவ்விகள் ஒலி/ஒளிபரப்பாகியுள்ளன. அதேபோல இந்த ஊடகங்களில் நூற்றுக்கும் அதிகமான சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.

எழுதிய நூல்கள்[தொகு]

ஜெ. மீராமொஹிதீன் இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

  • இஸ்லாமியக் கதைகள் - 1வது பதிப்பு மார்ச் 1990, (இந்நூல் முன்று பதிப்புகள் வெளிவந்துள்ளன, 1998ல் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டுள்ளது)
  • ஹஜ் வழிகாட்டி - 1வது பதிப்பு மார்ச் 1999

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._மீராமொஹிதீன்&oldid=2716439" இலிருந்து மீள்விக்கப்பட்டது