உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயந்தி சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயந்தி சங்கர்
பிறப்புமதுரை, தமிழ்நாடு,  இந்தியா
தொழில்எழுத்தாளர்
வகைபுதினம், வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்பு

ஜெயந்தி சங்கர் ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் பிறந்து பல மாநிலங்களிலும் வளர்ந்து 1990 முதல் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். வீட்டில் இவரது பெயர் சங்கரி. எழுத்து தவிர இசையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு.

குடும்பப் பின்னணி

ஜெயந்தி சங்கர் நாகசாமி ஐயர், கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தை இந்திய நடுவண் அரசின் முன்னாள் பொறியாளர். கணவர் சங்கர் சிங்கப்பூரில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இவர்களுக்கு கிருஷ்ணா, ராகவ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

கல்வி

ஒரிசா, மதுரை, கோயம்புத்தூர், ஷில்லாங், சென்னை போன்ற ஊர்களில் பள்ளிப் படிப்பை படித்துவிட்டு திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் 1985 இல் இயற்பியல் பட்டம் பெற்றார். ஏப்ரல் 2013 முதல் சிங்கப்பூரின் தமிழ் முரசு நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

எழுத்துலக வாழ்வு

1995 ஆம் ஆண்டிலிருந்து சிறுகதைகள், கட்டுரைகள், நெடுங்கதைகள், புதினங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆகிய அனைத்துத் தளங்களிலும் எழுதி வருகிறார். பாரதிய வித்யா பவனின் நவ்னீத் இந்தி டைஜஸ்ட்டில் ஜனவரி 2008 இதழில் இவரின் 'திரிசங்கு' சிறுகதை இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 'வானவில் கூட்டம்' போன்ற உலகத் தமிழ்ச் சிறுகதைகள் அடங்கிய சில தொகுப்புகளில் இவரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவர் ஆங்கிலத்தில் எழுதிய, ‘Read Singapore’ என்ற சிறுகதை 2013 இல் உருசிய மொழியில் மொழியாக்கம் செய்யப் பெற்றது.

பரிசுகளும் விருதுகளும்

  • 2014ல் ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத் தொகுப்புக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது வழங்கப்பட்டது.
  • 2014ல் ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத் தொகுப்பு 2013க்கான ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது’ வழங்கப்பட்டது.
  • 2013ல் ‘திரிந்தலையும் திணைகள்’ நாவலுக்கு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் ‘கரிகாலன் விருது 2012’[சான்று தேவை]
  • 2009 கல்கி 28-12-08ல் பிரசுரமான சிறுகதை 'புதிய அவதாரம்' இலக்கியச் சிந்தனை அமைப்பினால் 2008 டிசம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ளது.[சான்று தேவை]
  • 2009 'மனப்பிரிகை' நாவலுக்கு - அரிமா சக்தி 2008 விருது அளிக்கப்பட்டது.
  • 2009 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' நூலுக்கு நல்லி - திசையெட்டும் இலக்கிய விருது 2009'
  • 2008 சிங்கப்பூர் இலக்கிய விருது - 2008க்கு இவரின் சிறுகதைத் தொகுப்பான 'பின் சீட்' தேர்வானது.
  • 2007 - 'தமிழ் நேயம்' அமைப்பின் பத்தாவது தொகுதியான 'சுடும் நிலவு'ல் 'வீடு' சிறுகதை தேர்வு/பிரசுரம்
  • 2007 - 2006ஆம் வருடம் பிரசுரமான 'நியாயங்கள் பொதுவானவை' என்ற சிறுகதைத் தொகுப்பு திருப்பூர் அரிமா சங்கத்தினர் ஏற்பாடு செய்த 'அரிமா சக்தி விருது 2006'ல் - சிறப்புப் பரிசு பெற்றது.
  • 2006 - 'தமிழ் நேயம்' அமைப்பின் பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் 'சொல்லாத சொல்' என்ற சிறுகதை முதல் தகுதி. 'கனலும் எரிமலை' என்ற ஒன்பதாவது தொகுதியில் பிரசுரம்.
  • 2005 - அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் 'சேவை' என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • 2005 - பிரபல எழுத்தாளர் கோவை ஞானி அவர்கள் தலைமையில் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் ஆதரவில் 'தமிழ் நேயம்' சார்பில் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி - 'கடைசிக் கடிதம்’ என்ற சிறுகதை முதல் தகுதி - அமைப்பின் எட்டாவது தொகுதியான 'புதிய காளி'யில் பிரசுரம்.
  • 2010 'திரைகடலோடி' சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கிய விருது 2010 க்குத் தேர்வு
  • 2008 சிங்கப்பூர் இலக்கிய விருது - 2008க்கு இவரின் சிறுகதைத் தொகுப்பான 'பின் சீட்' தேர்வானது.
  • 2005 - தேசியகலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்க் இணைந்து நடத்திய தங்க முனைப்பேனா விருது கௌரவக் குறிப்பு - ‘வேண்டியது வேறில்லை' (குறுநாவல்) - நான்காமிடம்
  • 2005 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் (முத்தமிழ் விழா ) 'மழலைச்சொல் கேளாதவர்' என்ற சிறுகதை ஊக்கப்பரிசு.
  • 2004 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் - 'முத்தமிழ் விழா' மற்றும் ‘தமிழ் முரசு’ ஏற்பாட்டில் ‘வளர் தமிழ் இயக்கத்தின்’ ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவு சிறுகதைப் போட்டியில் 'பொம்மை' சிறுகதை இரண்டாம் பரிசு
  • 2001 - சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் நடத்திய உலகத்தமிழாசிரியர் மாநாட்டை ஒட்டி நடத்திய 'குறுநாவல்' போட்டியில் 'குயவன்' என்ற முதல் (தங்கப்) பரிசு
  • 2001 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரின் சிறுகதை 'நொண்டி' (நுடம்) இரண்டாம் பரிசு.
  • 2000 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடந்திய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் சிலப்பதிகாரப் போட்டியில் ஆறுதல் பரிசு.
  • 1998 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடந்திய பாவேந்தர் பாரதிதாசன் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு.

நூல்கள்

சிறுகதைத் தொகுதிகள்

  • நாலேகால் டாலர் - 2005 - மதி நிலையம்
  • பின் சீட் - 2006 - மதி நிலையம்
  • நியாயங்கள் பொதுவானவை - 2006 - மணிமேகலை பிரசுரம்
  • மனுஷி - 2007 - மதி நிலையம்
  • திரைகடலோடி - 2008 - மதி நிலையம்
  • தூரத்தே தெரியும் வான்விளிம்பு - 2010 - சந்தியா பதிப்பகம்
  • முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும் - 2013 - அம்ருதா பதிப்பகம்

குறுநாவல்

  • முடிவிலும் ஒன்று தொடரலாம் - 2005 - சந்தியா பதிப்பகம்

புதினம்

  • வாழ்ந்து பார்க்கலாம் வா - 2006 - சந்தியா பதிப்பகம்
  • நெய்தல் - 2007 - சந்தியா பதிப்பகம்
  • மனப்பிரிகை - 2008 - சந்தியா பதிப்பகம்
  • குவியம் - 2009 - சந்தியா பதிப்பகம்
  • திரிந்தலையும் திணைகள் - 2012 - சந்தியா பதிப்பகம்- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81343-02-9

கட்டுரைத் தொகுதிகள்

  • ஏழாம் சுவை - 2005 - உயிர்மை பதிப்பகம்
  • பெருஞ்சுவருக்குப் பின்னே - சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும் - 2006 - உயிர்மை பதிப்பகம்
  • சிங்கப்பூர் வாங்க - விகடன் பிரசுரம் - 2006
  • ச்சிங் மிங் - 2009 - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
  • கனவிலே ஒரு சிங்கம் - 2010 - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
  • கூட்டுக்குள் அலையும் தேனீக்கூட்டம் - சீனாவின் உள்நாட்டு இடப்பெயர்வுகள் - 2010 - அம்ருதா பதிப்பகம்

மொழிபெயர்ப்புகள்

  • மிதந்திடும் சுயபிரதிமைகள் - சீனக் கவிதைகள் (ஆங்கிலத்தினூடாக) - 2007 - உயிர்மை பதிப்பகம்
  • சூரியனுக்கு சுப்ரபாதம் - சுயமுன்னேற்றக் கட்டுரைகள் - 2007 ‍ - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
  • மீன் குளம் - சிறார் சீனக்கதைகள் (ஆங்கிலத்தினூடாக) 2008 - விவேக் எண்டர்பிரைஸ் (மதி நிலையம்)
  • என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி' - சீனத்துச் சிறுகதைகள் - (ஆங்கிலத்தினூடாக)- 2011 - காலச்சுவடு பதிப்பகம் - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80240-70-1
  • இறந்தவளுக்குத் திருமணம் - சீனத்துச் சிறுகதைகள் - (ஆங்கிலத்தினூடாக)- 2013 - கயல்கவின் பதிப்பகம்

வாழ்க்கை வ‌ர‌லாறு

  • இசையும் வாழ்க்கையும் - (காற்றினிலே வரும் கீதம் - எம். எஸ். சுப்புலட்சுமி + சங்கீத பிதாமகர் - செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் + நாத யோகி - மதுரை மணி ஐயர் + நாதப்பிரமம் - அரியக்குடி ராமானுஜ ஐங்கார்) - 2007 - சந்தியா பதிப்பகம்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயந்தி_சங்கர்&oldid=2698877" இலிருந்து மீள்விக்கப்பட்டது