ஜி. பார்த்தசாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜி.பார்த்தசாரதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜி. பார்த்தசாரதி
பிறப்புமே 13, 1940 (1940-05-13) (அகவை 83)
தேசியம்இந்தியர்
கல்விஇளங்கலைப் பொறியியல்
படித்த கல்வி நிறுவனங்கள்கிண்டி பொறியியல் கல்லூரி

கோபாலசாமி பார்த்தசாரதி (ஜி.பார்த்தசாரதி) மே மாதம் 13 ஆம் நாள் 1940 ஆம் வருடம் பிறந்தார். இவர் சைப்ரஸ் (1990-1992), மியான்மர் (1992-1995), ஆஸ்திரேலியா (1995-1998) மற்றும் பாகிஸ்தான் (1998-2000) ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றினார். இவர் 1963 முதல் 1968 வரை இந்திய ராணுவத்திலும் பணியாற்றியுள்ளார்.

இளமைப் பருவம்[தொகு]

இவர் 1962 ஆம் ஆண்டு சென்னை கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

இந்திய வெளியுறவுத்துறையில் பணி[தொகு]

  • 1968 இந்திய வெளியுறவுத்துறையில் பணி
  • 1982 பாகிஸ்தான் கராச்சியில் பணி
  • 1985 பிரதமர் அலுவலகத்தில் பணி
  • 1990 சப்ரஸ்-ல் பணி
  • 1992 மியான்மரில் பணி
  • 1995 ஆஸ்திரேலியாவில் பணி
  • 1998 பாகிஸ்தானில் பணி
  • 2000 இந்திய வெளியுறவுத்துறையில் செய்தித் தொடர்பாளர் பணி
  • மே 31 , 2000 பணி ஓய்வு.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான இவரது கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._பார்த்தசாரதி&oldid=1776397" இலிருந்து மீள்விக்கப்பட்டது