ச. லெ. சிலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சயாஜி லெட்சுமன் சிலாம் (S. L. Silam)(பிறப்பு 18 மே 1896) என்பவர் இந்தியாவில் புதுச்சேரி ஒன்றிய பகுதியின் முதல் துணைநிலை ஆளுஞர் ஆவார். இவர் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தின் முதல் மற்றும் இரண்டாம் சட்டப் பேரவைக் கூட்டங்களுக்கு ஆளுநராக இருந்தார்.

இவர் 1951 மற்றும் 1957 தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பம்பாய் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நவம்பர் 21, 1956 முதல் ஜூன் 16, 1957 வரை இருமொழி மும்பை மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் இருந்தார். 1957 தேர்தல்களுக்குப் பிறகு இவர் 1960 ஏப்ரல் 30 வரை சபாநாயகராகத் தொடர்ந்தார். இவர் 1 மே 1960 முதல் 1962 மார்ச் 14 வரை மகாராட்டிர சட்டமன்றத்தின் முதல் சட்டமன்ற சபாநாயகரானார்.[1]

சிலாம் 1896 மே 18 அன்று மும்பையில் பிறந்தார். ஆனால் இவரது குடும்பம் மகாராட்டிராவின் நாந்தேட் மாவட்டம் (அப்போது நிஜாம் பேரரசின் ஒரு பகுதி) கார்கேலியில், வசித்து வந்தது. இவர் இளம் கலை பட்டத்துடன் சட்டத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய விடுதலை போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட இவர், ஒத்துழையாமை இயக்கத்தின் போது 1942 முதல் 1945 வரை 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். மும்பை நகராட்சி ஒத்துழைப்பில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 1942இல் முதல் முறையாக மும்பையிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தெலுங்கு மித்ரா வெளியீட்டின் ஆசிரியராகவும் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.
முன்னர்
துவக்கம்
துணைநிலை ஆளுஞர்
14 அக்டோபர் 1963–13 அக்டோபர் 1968
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._லெ._சிலாம்&oldid=3552522" இலிருந்து மீள்விக்கப்பட்டது