சௌத்ரி ராம் லுபாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌத்ரி ராம் லுபாயா
Chaudhary Ram Lubaya
சட்டப் பேரவை உறுப்பினர், பஞ்சாப்
பதவியில்
2002–2007
முன்னையவர்மொகிந்தர் கவுர் இயோசு
பின்னவர்மொகிந்தர் கவுர் இயோசு
தொகுதிசாம்சௌராசி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1941
பிப்லன்வாலா, ஓசியார்ப்பூர்,பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு2017
ஓசியார்ப்பூர், பஞ்சாப், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சந்தோசு சௌத்ரி
பிள்ளைகள்3
பெற்றோர்சௌத்ரி சுந்தர் சிங்

சௌத்ரி ராம் லுபாயா (Chaudhary Ram Lubaya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார், 1914 முதல் 2017 வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சௌத்ரி ராம் லுபாயா , பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாபில் உள்ள ஓசியார்பூரில் சௌத்ரி சுந்தர் சிங்கிற்கு மகனாகப் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இவர் பட்டம் பெற்றவர். [1] [2]

முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சந்தோசு சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார். [3]

தொழில்[தொகு]

2002 ஆம் ஆண்டில் மொகிந்தர் கவுர் இயோசை தோற்கடித்து சாம் சௌராசி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினரானார். [4] [5]

சௌத்ரி ராம் லுபாயா 2017 ஆம் ஆண்டு தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மாரடைப்பு காரணமாக இறந்தார். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Choudhary Ram Lubhaya (Indian National Congress: Constituency- Sham Chaurasi (Hoshiarpur) – Affidavit Information of Candidate". பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  2. "Rahul Gandhi: Congress's dalit card turning against established dalit leaders of Doaba region". பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  3. "Ex-Congress MLA Ram Lubhaya dies at 77" (in ஆங்கிலம்). 2017-01-13. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  4. "In Doaba, Majha, only 10 women candidates to slug it out on 48 seats - Indian Express". பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  5. "Sham Chaurasi Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  6. "Congress leader Santosh Chaudhary bereaved, husband Ram Lubhaya no more". பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌத்ரி_ராம்_லுபாயா&oldid=3829047" இலிருந்து மீள்விக்கப்பட்டது