சோடியம் அடுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு சீரொளி வழிகாட்டி நட்சத்திர சோதனை

சோடியம் அடுக்கு (Sodium layer) என்பது புவியின் வளிமண்டலத்தில் காணப்படும் கட்டுறா இடை மண்டலத்தில் இருக்கும் சோடியத்தின் அயனி நிலைக்கு மாறாத அணுக்களின் அடுக்கைக் குறிக்கிறது. 80 முதல் 150 கிலோமீட்டர் அல்லது 50 முதல் 65 மைல் தொலைவிலும், சுமார் 3.1 மைல் அல்லது 5 கிலோமீட்டர் ஆழம் வரைக்கும் இவ்வடுக்கு நிறைந்துள்ளது. எரிகற்களின் தேய்மானத்தின் விளைவாக சோடியம் உருவாகிறது. இடைமண்டலத்திற்கு கீழேயிருக்கும் புவியின் வளிமண்டலத்தில் இருக்கும் சோடியமானது பொதுவாக ஆக்சிசனுடன் பிணைந்து சோடியம் ஆக்சைடாகக் காணப்படுகிறது. அதே போல இவ்வடுக்கிற்கு மேலே காணப்படும் சோடியம் அணுக்கள் அயனியாக்கம் அடைந்து காணப்படுகின்றன.

சோடியம் அணுக்களின் அடர்த்தி காலநிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. இவ்வடுக்கில் உள்ள சோடியத்தின் சரசரி தொகையீடு பாதை அடர்த்தி 4 பில்லியன் சோடியம் அணுக்கள்/செ.மீ3 ஆகும்.[1]

இவ்வடுக்கில் உள்ள சோடியம் அணுக்கள் குறிப்பாக கிளர்வுற்ற நிலையில் காணப்படுகின்றன மற்றும் 589 நானோ மீட்டர் அலைநீளக் கதிர்வீச்சை வெளிப்படுத்துகின்றன. நிறமாலைப் பட்டையின் மஞ்சள் பகுதியில் இந்தக் கதிர்வீச்சளவு இடம்பெறுகிறது. இக்கதிர்வீச்சுப் பட்டைகள் சோடியம் டி கோடுகள் என்றும் கதிர்வீச்சின் விளைவாகத் தோன்றும் ஒளியியல் விளைவு இரவுக்காற்று ஒளிர்வு என்றும் அழைக்கப்படுகின்றன.

மேல் வளிமண்டலத்தில் சீரொளி வழிகாட்டி நட்சத்திரங்களை செயற்கையாக உருவாக்க இந்த சோடியம் அடுக்கு உதவும் என்று வானியல் அறிஞர்கள் கண்டறிந்தனர். தகவமைப்பு ஒளியியலில் வளிமண்டல இயக்கங்களை ஈடுசெய்ய சீரொளி வழிகாட்டி நட்சத்திரங்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. இதன் விளைவாக ஒளியியல் தொலை நோக்கிகளால் அவற்றின் கோட்பாட்டு எல்லைகளைத் தாண்டி நெருக்கமான வரையறைகளை தீர்மானிக்க இயலும்.

1929 ஆம் ஆண்டு அமெரிக்க வானியல் அறிஞர் வெசுடோ சிலிப்பெர் முதன்முதலில் சோடியம் அடுக்கினைக் கண்டுபிடித்தார். இரவுக்காற்று ஒளிர்வு ஒளியல்நிகழ்வை விளக்க, 1939 ஆம் ஆண்டில் பிரித்தானிய அமெரிக்க புவிப்பௌதிகவியலர் சிட்னி சாப்மான் ஒரு வினைச்சுழற்சிக் கோட்பாட்டை முன்மொழிந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ageorges, N.; Hubin, N.; Redfern, R.M. (1999), "Atmospheric Sodium Column Density Monitoring", ESO Conference and Workshop Proceedings, Garching: European Southern Observatory, 56, Bibcode:1999ESOC...56....3A, archived from the original (PDF) on 2012-03-19, பார்க்கப்பட்ட நாள் 2011-09-04
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_அடுக்கு&oldid=3367845" இலிருந்து மீள்விக்கப்பட்டது