சேதி ஆறு

ஆள்கூறுகள்: 28°57′58″N 81°06′15″E / 28.9661°N 81.1043°E / 28.9661; 81.1043
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேதி ஆறு
2017-ல் சேதி ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஅபி மலையின் பள்ளத்தாகு மற்றும் நம்பா சிகரம்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
காக்ரா ஆறு
வடிநில சிறப்புக்கூறுகள்
வடிநிலம்காக்ரா ஆறு

சேதி ஆறு (Seti River) என்பது மேற்கு நேபாள கர்னாலி ஆற்றின் முக்கியமான துணை ஆறாகும்.[1]

ஆற்றோட்டம்[தொகு]

இமயமலையின் தெற்கு சரிவுகளில் உள்ள அபி மற்றும் நம்பாவின் இரட்டை சிகரங்களைச் சுற்றியுள்ள பனி வெளி மற்றும் பனிப்பாறைகளில் சேதி ஆறு உருவாகிறது. இப்பகுதி நேபாளம், இந்தியா (குமாவோன், உத்தராகண்டம்) மற்றும் சீனா (திபெத்து) ஆகிய நாடுகளின் எல்லைகளின் முச்சந்திக்கு அருகில் உள்ளது. இந்த ஆறு முதலில் தென்கிழக்கு திசையில் பாய்ந்து, பின்னர் திரும்பி தென்மேற்கு திசையில் பாய்கிறது. சேதி ஆறு, இறுதியாகத் தென்கிழக்கு திசையில் திரும்பி கர்னாலி அல்லது காக்ரா ஆற்றுடன் இணைகிறது. இது மகாபாரத மலைத்தொடரின் குறுக்கே கண்கவர் பள்ளத்தாக்கை ஏற்படுத்தியுள்ளது. இங்குக் குறுகிய இடைவெளியில் குகைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் காணப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேதி_ஆறு&oldid=3392598" இலிருந்து மீள்விக்கப்பட்டது