எட்டிசலட்
எட்டிசலட் (Etisalat) அல்லது டிகோ இலங்கையில் நகர்பேசிச் சேவை வழங்கும் ஒரு நிறுவனமாகும். ஆரம்பத்தில் செல்டெல் என அறியப்பட்ட இந்நிறுவனம் 1989 இல் ஆரம்பிக்கப்பட்ட நகர்பேசி சேவையாகும். 2007 ஆம் ஆண்டில் ரிகோவாகப் மீண்டும் பெயர் மாற்றப்பட்டது. 2010 இல் அபுதாபியைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனம் டீகோவை வாங்கியுள்ளது [1].
பொருளடக்கம் |
[தொகு] சந்தை விரிவாக்கம்
மார்ச் 2006 இல் இருந்து அக்டோபர் 2006 வரையிலான 8 மாதகாலப் பகுதியில் 500 தொலைத்தொடர்பாடற் கோபுரங்களை நிர்மாணித்துள்ளது. இதுவரை மொத்தம் 1100 தகவல் கோபுரங்களைக் கொண்டுள்ள எடிசலாட் எதிர் காலத்தில் $138 மில்லியனை செலவு செய்து மேலும் 480 தகவல் கோபுரங்களை அமைக்குவுள்ளது [2]. எட்டிசலட் 2.325 மில்லியனுக்கும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதுடன் இது நகர்பேசி சந்தையில் 17% என்பதையும் குறிப்பிடவேண்டும்[3].
எடிசலாட் இலங்கையில் கூகிள் காலண்டரூடாகக் குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியுள்ள வலையமைப்புக்களுள் ஒன்றெனினும் இதில் இடத்தைக் காட்டும் (அதாவது எந்தக்கோபுரத்திற்கு அருகில் நிற்கின்றீர்கள் எடுத்த்துக் காட்டாக திருகோணமலை) என்னும் வசதி இன்னமும் கிடையாது.
[தொகு] சேவைகள்
எட்டிசலாட் நிறுவனம் சாதாரண குரல் அழைப்பு, குறுஞ்செய்தி, ஜி.பி.ஆர்.எஸ், 3ஜி[4] போன்ற சேவைகளை வழங்குகின்றது.
[தொகு] வெளியிணைப்புக்கள்
- எடிசலாட் (ஆங்கிலத்தில்)
[தொகு] உசாத்துணைகள்
| இலங்கையின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் | ||
| லங்காபெல் | ஹட்ச் | எட்டிசலட் | ஸ்ரீ லங்கா டெலிகொம் | டயலொக் | மோபிட்டல் | எயார்டெல் | சண்டெல் | ||