சென்னை இலக்கியச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை இலக்கியச் சங்கம் (Madras Literary Society) என்பது சென்னையின், ஒரு கற்றறிந்தோர் சங்கமாகும். இது 1817 இல் நிறுவப்பட்டது.[1] மேலும் 1830 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ராயல் ஆசியடிக் சொசைட்டியுடன் இணைந்தது. இது மதராசின் தலைமை நீதிபதியான சர் ஜான் ஹென்றி நியூபோல்ட் அவர்களால் நிறுவப்பட்டது, இதன் நிறுவனர் செயலாளராக பெஞ்சமின் கை இருந்தார். சங்கமானது மெடிரான்சாக்சன்ஸ் ஆப் த லிட்ரரி சொணைட்டி ஆப் மெட்ராஸ் என்று ஒரு பத்திரிகையை வெளியிட்டது. மற்றும் 1833 முதல் [மெட்ராஸ்] ஜர்னல் ஆஃப் லிட்டரேச்சர் அண்ட் சயின்ஸ் என்ற பெயரில் இதழ் வெளியானது. சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஐரோப்பியர்களாவர். சங்கத்தில் சேர்க்கப்பட்ட முதல் இந்தியர் கவாலி லட்சுமையா ஆவார். அவர் காலின் மெக்கன்சியுடன் பணிபுரிந்தவராவார்.[2] 1894 இல் இதழ் வெளியீடு நிறுத்தப்பட்டது. இந்த இதழ் புவியியல், வானிலை, விலங்கினங்கள், தாவரங்கள், பண்பாடு, வரலாறு பற்றிய விரிவான ஆய்வுகளை வெளியிட்டது.[3] தாமஸ் சி. ஜெர்டன், வால்டர் எலியட் ஆகியோர் இதன் பத்திரிகையில் எழுதிய முக்கியமானவர்களில் சிலராவர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பொதுக்கல்வித் துறை வளாகத்தில், சிவப்பு மணற்கலால் கட்டபட்ட கட்டடத்தில் சங்கத்தால் நடத்தப்படும் நூலகம் செயல்படுகிறது. இது நகரத்தின் மிகப் பழமையான பொது நூலகமாகவும், இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றாகவும் உள்ளது. சென்னை, அரசு அருங்காட்சியகமானது, நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை இலக்கியச் சங்கம் நூலகத்தின் விரிவாக்கமாக துவக்கப்பட்டதாகும். பின்னரே எழும்பூரில் உள்ள பாந்தியன் சாலையில் உள்ள தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. 1890 ஆம் ஆண்டில், நூலகத்தின் புத்தக சேகரிப்பின் பெரும்பகுதி கன்னிமாரா பொது நூலகத்தை, உருவாக்க அருங்காட்சியகம் இருந்த அதே வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. பிரத்யேக குழு உறுப்பினர்கள் மற்றும் புரவலர்களால் பராமரிக்கப்படும் இதன் முதன்மை நூலகம் டி.பி.ஐ வளாகத்தில் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Srinivasachari, C.S. (1839). History of the City of Madras. Madras: P. Varadachary & Co.. பக். 216. https://archive.org/stream/historyofthecity035512mbp#page/n301/mode/2up. 
  2. Wagoner, Phillip B. (2003). "Precolonial Intellectuals and the Production of Colonial Knowledge". Comparative Studies in Society and History 45 (4): 783–814. doi:10.1017/S0010417503000355. https://archive.org/details/sim_comparative-studies-in-society-and-history_2003-10_45_4/page/783. 
  3. Anon. (1828). "Review-Transactions of the Literary Society of Madras". The Asiatic Journal and Monthly Register for British India and Its Dependencies 26: 332–333. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_இலக்கியச்_சங்கம்&oldid=3920296" இலிருந்து மீள்விக்கப்பட்டது