சூறாவளி ஜுவான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தரம் 2 சூறாவளி (ச.சி.சூ.த) | ||
|---|---|---|
|
சூறாவள் ஜுவான் நோவா ஸ்கோட்டியாவை 100மை/மணி கதியில் நெருங்குகிறது. |
||
| தொடக்கம் | செப்டம்பர் 24, 2003 | |
| மறைவு | செப்டம்பர் 29, 2003 | |
| காற்றின் வேகம் |
|
|
| குறைவான அமுக்கம் | 969 மில்லிபார் (hPa; 28.63 inHg) | |
| இறப்புகள் | 4 (நேரடி), 4 (மறைமுக) | |
| சேதம் | $200 மில்லியன் (2003 $) $219.3 million (2006 $) |
|
| பாதிப்புப் பகுதிகள் | கனடா (முக்கியமாக நோவா ஸ்கோஷியா, பிரின்ஸ் எட்வேர்ட் தீவு) | |
| 2003 அட்லாண்டிக் சூறாவளிப் பருவம் | ||
சூறாவளி ஜுவான் (Hurricane Juan) என்பது கனடாவின் தெற்குப் பகுதியை செப்டம்பர் 2003இல் தாக்கிய மிகவும் முக்கியமானதொரு சூறாவளி ஆகும்.
ஜுவான் பெர்முடாவின் தென்கிழக்கில் செப்டம்பர் 24, 2003இல் உருவாகியது. இது பின்னர் படிப்படியாக உக்கிரமடைந்து செப்டம்பர் 27இல் இரண்டாம் வகை செறிவை அடைந்து வடக்கு நோக்கித் தொடர்ந்து நகர்ந்தது. நோவா ஸ்கோஷியாக் கரையை அடையும் போது இதன் கதி மணிக்கு 165 கிமீ ஆகவிருந்தது. ஆனாலும் நீரின் குளிர்மை காரணமாக இதன் செறிவு சிறீது குறைந்திருந்தது. ஹாலிபாக்ஸ் நகராட்சியை இது செப்டம்பர் 29இல் தாக்கும் போது இது இரண்டாம் வகை செறிவாகவே இருந்தது.
இப்புயல் மத்திய நோவா ஸ்கோஷியா, ஹாலிபாக்ஸ், மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு ஆகியவற்றில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. மொத்தம் $200 மில்லியன் பொருட்சேதத்தை உண்டுபண்ணியது[1][2].
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Chris Fogarty (2003). "Hurricane Juan Storm Summary". Canadian Hurricane Centre/Environment Canada. பார்த்த நாள் 2006-11-20.
- ↑ Peter Boywer (2003). "Hurricane Juan 2003 Storm Summary". Environment Canada. பார்த்த நாள் 2006-11-20.
[தொகு] வெளி இணைப்புகள்
- ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய சூறாவளி ஜுவான் (சி. ஜெயபாரதன்)
- சூறாவளி ஜுவான் - (ஆங்கிலத்தில்)