சூரிய ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூரிய சக்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சூரிய ஓளி மற்றும் வெப்பத்திலிருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் (solar energy) எனப்படுகிறது. சூரிய ஆற்றல் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் மற்ற மீள உருவாக்கக்கூடிய ஆற்றல்களான, காற்றாற்றல், நீர்மின்னியல், மற்றும் உயிரியல் தொகுதி (biomass) ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு பெருமளவில் துணை புரிகிறது. பூமியில் விழும் சூரிய ஆற்றலில் மிகவும் சிறிய பகுதியே ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.

சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது.

  1. சூரிய ஓளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Photovoltaic).
  2. சூரிய வெப்பத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Solar Thermal).

சூரிய ஒளி ஆற்றல் [தொகு]

ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு சூரிய மின்னாற்றல் உற்பத்தி நிலையம்

சூரியனிலிருந்து பெறப்படும் ஒளி சூரியக்கலங்கள் (solar cell) மூலம் நேர் மின்சார ஆற்றலாக மாற்றம் பெறுகின்றன. இந்த மின்சாரத்தை மின்கலங்களில் சேமித்து தேவையான போது உபயோகிக்கலாம். இன்று, உலகின் பல பகுதிகளில் இரவு நேரங்களில் தெருக்களில் வெளிச்சத்துக்காகவும், கிராமங்களில் நீர்ப்பாசன மோட்டார்களை இயக்குவதற்கும் சூரியக் கலங்கள் வெற்றிகரமாக உபயோகப்படுத்தப்படுகின்றன.

சூரிய ஆற்றலை பெற்று, மின்சாரமாக மாற்றி, சேமித்து பயன்படுத்த ஏதுவாக்கும் கருவி ஒருங்கமைப்பை சூரிய ஆற்றல் ஒருங்கியம் எனலாம். அது பின்வரும் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.

  1. சூரியக்கலங்கள்
  2. ஒருன்கிய கட்டுப்படுத்தி (Controller)
  3. மின்கலம்
  4. நேர்மாற்றி (Inverter)

சூரிய வெப்ப ஆற்றல் [தொகு]

The Solar Two 10 MW solar power facility, showing the power tower (left) surrounded by the sun-tracking mirrors.

சூரிய ஒளியை கண்ணாடிகள் மூலம் ஒருமுகப்படுத்தி கிடைக்கும் வெப்பத்தைக் கொண்டு நீராவி எஞ்சின் தத்துவத்தின் முறையிலும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

தண்ணீரைச் சூடாக்குவதற்கும், நிரப்பிடம் சூடாக்குவதற்கும், நிரப்பிடம் குளிருட்டவும் மற்றும் செயல்முறை வெப்ப உற்பத்திக்கும் சூரிய வெப்ப ஆற்றலை பயன்படுத்தலாம். இவைகளை விவரமாக கீழே காண்போம்,

  1. நீரைச் சூடாக்குதல் (water heating)
  2. சூடாக்குதல், குளிரூட்டுதல், காற்றோட்ட முறை (heating,cooling,ventilation)
  3. சமைத்தல் (cooking)
  4. செயல்முறை வெப்ப உற்பத்தி (process heat generation)

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_ஆற்றல்&oldid=1414260" இருந்து மீள்விக்கப்பட்டது