சுரேகா யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேகா யாதவ்
பிறப்புசுரேகா ஆர். போஸ்லே
2 செப்டம்பர் 1965 (1965-09-02) (அகவை 58)
சாத்தாரா, மகாராட்டிரம், இந்தியா
அறியப்படுவதுஇந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர்
பெற்றோர்சோனாபாய் & இராமச்சந்திர போஸ்லே
வாழ்க்கைத்
துணை
சங்கர் யாதவ்
பிள்ளைகள்2

சுரேகா யாதவ் (Surekha Yadav) சுரேகா சங்கர் யாதவ் (பிறப்பு 2 செப்டம்பர் 1965) இந்தியாவில் உள்ள இந்திய இரயில்வேயின் ஒரு பெண் லோகோபைலட் (இரயில் ஓட்டுநர்) ஆவார்.[1][2] 1988-ல் இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனரானார். ஏப்ரல் 2000-ல் அப்போதைய இரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜியால் நான்கு பெருநகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட போது மத்திய ரயில்வேக்கான முதல் "பெண்கள் சிறப்பு" உள்ளூர் ரயிலை இவர் ஓட்டினார்.[3] [4] 8 மார்ச் 2011 அன்று, அனைத்துலக பெண்கள் நாள் அன்று, புனேவிலிருந்து சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் வரை " தக்காண ராணி" என்ற வண்டியை ஓட்டிச் சென்ற ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றார். [3] [5][6] மத்திய ரயில்வே மண்டலத்தின் தலைமையகமான மும்பையின் அப்போதைய நகரத்தந்தை சிரத்தா ஜாதவ் இவரை வரவேற்றார்.[6] மும்பை-புனே ரயில்வே பிரவாசி சங்கம் இந்த ரயிலை இயக்குவதற்கு இவருக்கு வலுவாக ஆதரவளித்தது.[7] பத்து வருடங்கள் கழித்து மும்பையில் இருந்து இலக்னோவிற்கு அனைத்து பெண் குழுவினரையும் ஓட்டிச் சென்று சாதனையை இவர் மீண்டும் செய்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சுரேகா மகாராட்டிராவில் உள்ள சாத்தாராவில் 2 செப்டம்பர் 1965 அன்று சோனாபாய் மற்றும் விவசாயியான இராம்சந்திர போசலேவுக்கு ஐந்து குழந்தைகளில் மூத்த மகளாகப் பிறந்தார்.[8] சாத்தாராவில் உள்ள புனித பால் கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பப் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, தொழில் பயிற்சியில் சேர்ந்தார் பின்னர் மேற்கு மகாராட்டிராவின் சத்தாரா மாவட்டத்தில் உள்ள கராத்திலுள்ள அரசு பாலிடெக்னிக்கில் மின்னியல் பொறியியல் பட்டம் முடித்தார் [9] [10] முதுகலை பட்டம் பெற கல்லூரி படிப்பைத் தொடர விரும்பினார். ஆனால் இந்திய இரயில்வேயில் பெற்ற ஒரு வேலை வாய்ப்பு இவரது மேற்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. [8]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 1990 இல் மகாராட்டிரா அரசில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஜிங்க்யா மற்றும் அஜிதேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் மும்பை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கின்றனர். [11]

சான்றுகள்[தொகு]

  1. & Rights 2001, ப. 185.
  2. Hanshaw 2003, ப. 96.
  3. 3.0 3.1 "Bold, Bindaas And Successful". Cityplus. 10 March 2011.
  4. "Indian Female Engine Loco Drivers". scientificindians.com. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
  5. "Realigning the tracks". The Hindu. 8 January 2013.
  6. 6.0 6.1 "Mumbai Western Railway believes in woman-power". DNAIndia. 9 March 2011.
  7. Costa, Roana Maria (8 March 2011). "Asia's first motor woman to pilot Deccan Queen". The Times of India.
  8. 8.0 8.1 Nair, Sulekha (31 May 2000). "The woman in the engine". The Indian Express.
  9. Hanshaw 2003.
  10. "Railwaywomen Around The World - A selection of press cuttings - India: Surekha Yadav (source: The Financial Express)". Hastings Press. 2001.
  11. "Railwaywomen Around The World - A selection of press cuttings - India: Surekha Yadav (source: The Financial Express)". Hastings Press. 2001."Railwaywomen Around The World - A selection of press cuttings - India: Surekha Yadav (source: The Financial Express)". Hastings Press. 2001.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேகா_யாதவ்&oldid=3678507" இலிருந்து மீள்விக்கப்பட்டது