சுரிந்தர் சிங் சோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வென்ற பதக்கங்கள்
ஆண்கள் வளைகோல் பந்தாட்டம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1980 மாசுக்கோ அணி

சுரிந்தர் சிங் சோதி (Surinder Singh Sodhi) இந்தியாவைச் சேர்ந்த வளைகோல் பந்தாட்ட வீரராவார். 16 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வளைகோல் பந்தாட்டப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைப்பதில் முக்கிய பங்கு வகித்த காரணத்தால் இவர் பிரபலமானார். இவர் மத்திய முன்கள ஆட்டக்காரராக இந்திய அணியில் விளையாடினார்.

எசுப்பானியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், சுரிந்தர் சிங் சோதி இந்தியாவுக்கு ஒரு அற்புதமான தொடக்கத்தைக் கொடுத்தார். ஏனெனில் இத்தொடக்கம் இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் இந்தியா மூன்று கோல்கள் முன்னிலை பெற உதவியது. சுரிந்தர் சிங் சோதி அதில் 2 கோல்கள் அடித்தார். ஆனால் எசுப்பானியா இந்திய அணியின் பாதுகாப்பைத் தாக்கி இறுதி 6 நிமிடங்களே உள்ள நிலையில் 2 கோல்கள் அடித்து விளையாட்டுக்குத் திரும்பியது. முகமது சாகித் இந்தியாவுக்காக மேலும் ஒரு கோல் அடித்தார். இருப்பினும், 4 நிமிடங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் எசுப்பானிய அணியின் தலைவர் யுவான் அமத் எசுப்பானியாவிற்காக மேலும் ஒரு கோல் அடித்தார். பரபரப்பான கட்டத்தை அடைந்த கடைசி சில நிமிடங்களில் இந்தியா இறுதியாக 4-3 என்ற கோல்கள் கணக்கில் வென்றது. இதனால் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கத்தை மீண்டும் பெற்றது. முந்தைய ஆட்டத்தில் சுரிந்தர் சிங் சோதி தான்சானியாவுக்கு எதிராக 5 கோல்களையும் கியூபாவுக்கு எதிராக 4 கோல்களையும் அடித்தார். [1]

1980 மாசுகோ ஒலிம்பிக்கில் சோதி அடித்த 15 கோல்கள், வளை கோலாட்ட விளையாட்டுகளில் தனி நபர் அடித்த இரண்டாவது அதிக கோல்கள் மற்றும் ஒலிம்பிக் வளைகோல் பந்தாட்டப் போட்டியில் இந்தியர் அடித்த அதிக கோல்கள் ஆகும். 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் உத்தம்சிங் அடித்திருந்த 15 கோல்கள் என்ற முந்தைய சாதனையை இப்போட்டியில் சோதியும் சமன் செய்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Goals scored by Sikh at Olympic Hockey" (PDF). Archived from the original (PDF) on 2008-12-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.

 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரிந்தர்_சிங்_சோதி&oldid=3555113" இலிருந்து மீள்விக்கப்பட்டது