சுரிதார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுரிதார் அல்லது சுரிதார் பைஜாமாக்கள்,என்பது இந்திய துணைக்கண்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் அணியும் இறுக்கமான கால்சட்டைகள் ஆகும்.[1]

அமைப்பு[தொகு]

பொதுவாக இவை சல்வாரின் மறுவரையரை செய்யப்பட்ட ஆடை என கருதலாம். ஏனெனில் சல்வார்கள் மேலே அகலமாகவும் கணுக்கால் குறுகலாகவும் வெட்டப்பட்டு தைக்கப்படுகின்றன. ஆனால் சுரிதார்கள் சுருக்கங்களோடு "பயாஸ்-கட்" எனப்படும் துணியின் சார்பு அல்லது மூலைவிட்ட திசையில் அதிக நீட்சியைப் பயன்படுத்தி தைக்கப்படுவதால் கால்களின் வரையறைகள் வெளிப்பட்டு காணப்படும். எனவே உடலோடு இவை ஒட்டி இருக்கும். காலை விட நீளமானவையாகவும் சில சமயங்களில் கணுக்காலில் இறுக்கமாக பொருத்தப்பட்ட பொத்தான் கொண்ட சுற்றுப்பட்டையுடன் முடிக்கின்றன.

அதிகப்படியான நீளம் மடிப்புகளாக விழுந்து, கணுக்காலில் தங்கியிருக்கும் வளையல்களைப் போல் தோன்றும் (எனவே 'சுரிதார்'; 'சூரி': வளையல், 'டார்': போன்றது). இதை அணிந்திருப்பவர் உட்கார்ந்திருக்கும் போது, இவ்வாறு அதிகப்படியான துணி வைத்து தைத்திருப்பதால், "எளிதாக" கால்களை வளைத்து வசதியாக உட்கார வைக்கிறது.

வரலாறு[தொகு]

சுரிதார் என்ற வார்த்தை இந்தியில் இருந்து வந்தது மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் தான் ஆங்கிலத்தில் வந்துள்ளது.[2] முன்னதாக, இந்தியாவில் அணியும் இறுக்கமான சுரிதார் போன்ற கால்சட்டைகளை ஆங்கிலேயர்கள் மொகுல் ப்ரீச்கள், நீண்ட காற்சட்டை அல்லது கொசு காற்சட்டை என்று குறிப்பிட்டுள்ளனர்.[3]

சுரிதார்களை பொதுவாக பெண்கள் கமீஸ் (மேலாடை) அல்லது ஆண்கள் குர்தா (தளர்வான மேல் சட்டை) சேர்த்தே அணிவார்கள், அல்லது ரவிக்கை மற்றும் பாவாடை இணைந்தும் அணியலாம்.

படத்தொகுப்பு[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "churidar". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  2. Hawkins, R. E. 1984. Common Indian words in English. Oxford University Press, New Delhi.
  3. Yule, Henry and A. C. Burnell. 1903. Hobson-Jobson: A Glossary of Colloquial Anglo-Indian Words and Phrases, and of Kindred Terms, Etymological, Historical, Geographical and Discursive. London: John Murray. 1021 pages.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரிதார்&oldid=3925020" இலிருந்து மீள்விக்கப்பட்டது