சுமன் ரங்கநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமன் ரங்கநாதன்
பிறப்புபெங்களூரு, கர்நாடகா, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1989 ம் ஆண்டு முதல்
வாழ்க்கைத்
துணை

  சுமன் ரங்கநாதன் அல்லது ரங்கநாத், [2] இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும், திரைப்பட நடிகையுமாவார். கன்னடம், பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் சுமன் நடித்து வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சுமன் ரங்கநாதன்,ஜூலை 26, 1974 ம் ஆண்டில் இந்தியாவின் கர்நாடக மாநிலம் தும்கூரில் பிறந்துள்ளார்.[3]

சித்லிங்கு (2012), ஆகாஸ் (2000) மற்றும் இஷ்க் கயாமத் (2004) ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட இவர், இந்திய திரைப்பட தயாரிப்பாளரான பன்டி வாலியாவை 2006 ம் ஆண்டு இறுதியில் திருமணம் செய்தார். ஆனால் எட்டே மாதங்களில் இவர்களது திருமணம் முடிவுபெற்றது. பின்னர் 3 ஜூன் 2019 அன்று கர்நாடகாவின் கொடுகு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான சாஜன் சின்னப்பாவை மணந்துள்ளார்.[4]

திரைப்படத்துறை[தொகு]

கன்னட நடிகரான, சங்கர் நாக் உடன் இணைந்து சிபிஐ ஷங்கர் (1989) என்ற கன்னடத் திரைப்படத்தில் முதன்முறையாக நடிகையாக அறிமுகமான இவர், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, பாலா ஹோம்பலே (1989), டாக்டர் கிருஷ்ணா (1989) சாந்தா சிசுனாலா ஷரீஃபா (1990) மற்றும் நம்மூரா ஹம்மேரா (1990) என பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு புது பாட்டு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.[5] தொடர்ந்து, பெரும்புள்ளி (1991), மாநகர காவல் (1991), குறும்புக்காரன் (1991), உன்னை வாழ்த்தி பாடுகிறேன் (1992), மேட்டுப்பட்டி மிராசு (1994) மற்றும் முதல் உதயம் (1995) போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

பாரேப் என்ற 1996 ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படத்தின் மூலம் அங்கு அறிமுகமானார்.சட்டவிரோத நுழைவு என்ற பெயரில் 1992 ம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான திரைப்படத்தின் தழுவலாகும். 1999 ம் ஆண்டில் வெளியான ஆ அப் லாட் சாலனில் இந்திய-அமெரிக்க சமூகவாதியாக நடித்துள்ளார்.[6]

மிஸ்டர் இந்தியா வேர்ல்ட் 2007க்கான நடுவர்கள் குழுவில் ரங்கநாத்தும் இருந்துள்ளார்.. இவர் கலர்ஸ் கன்னடத்தில் ஒளிபரப்பாகும் கன்னட யதார்த்த நிகழ்ச்சியான தகதிமிதாவின் நடுவராக இருந்துள்ளார்.[7]

முழு மூச்சாக கன்னட படங்களில் மட்டுமே நடிக்கத்தொடங்கிய சுமன், ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடுமையான பத்திரிகையாளர் வேடத்தில், நடிகர் அஜித்குமார் நடித்த, ஆரம்பம் (2013).

திரைப்படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.[8]

பல வெற்றிகரமான படங்களில் நடித்துள்ள சுமன், நீர்நிலை (2016) மற்றும் கவனுதாரி (2019) போன்ற பல திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்துள்ளார்.[9][10]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
1989 சி.பி.ஐ சங்கர் ஆஷா கன்னடம்
பாலா ஹோம்பலே
டாக்டர் கிருஷ்ணா சுவாதி
1990 சாந்த ஷிஷுனால ஷரீஃபா ஷரீபாவின் மனைவி
நம்மூரா ஹம்மேரா ராதா
20வது சதாப்தம் தெலுங்கு
கெம்பு சூர்யா திரிவேணி கன்னடம்
புதுப்பாட்டு ராஜி தமிழ்
பத்மாவதி கல்யாணம் பத்மாவதி தெலுங்கு
1991 பெரும்புள்ளி தமிழ்
மாநகர காவல் வித்யா
குறும்புக்காரன்
1992 உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் ப்ரியா
எல்லாரும் சொல்லனு அர்ச்சனா மலையாளம்
1994 மேட்டுப்பட்டி மிராசு ராதா தமிழ்
1995 முதல் உதயம் கீதா
உதவும் கரங்கள்
1996 பாரேப் சுமன் வர்மா இந்தி
1997 அன்கோன் மே தும் ஹோ பூஜா
1997 அச்சேனா அதிதி பூஜா பெங்காலி
1998 ஓ கந்தாசாரே நீவெஸ்து ஒலியவரு ஜானகி கன்னடம்
ஹட்யாரா சுமன் இந்தி
1999 ஆ அப் லாட் சாலன் லவ்லீன்
2000 ஏக் ஸ்ட்ரீ வைஷாலி
பாதல் ஐட்டம் டான்ஸ் சிறப்பு தோற்றம்
2001 பாவா நச்சாடு சுமா தெலுங்கு
ஆகாஸ் புஷ்பா இந்தி
குருக்ஷேத்திரம் அவராகவே சிறப்பு தோற்றம்
ஹத் இந்தி
முஜே மேரி பிவி சே பச்சாவ் அனுராதா
ஹம் ஹோ கயே ஆப்கே நிக்கி
2002 ஹம் தும்ஹாரே ஹை சனம் நீட்டா
2003 மார்க்கெட் லிசா
பாக்பன் கிரண் மல்கோத்ரா
2004 இஷ்க் கயாமத் சுமன்
2005 சவுதா இந்தி
2006 தேவகி தேவகி
புரப் அவுர் பஸ்சிம் போச்புரி
2008 பிந்தாஸ் ஐட்டம் டான்ஸ் கன்னடம் 'கழு மாமா' பாடலில் சிறப்பு தோற்றம்
மெஹபூபா இந்தி
புத்திவந்தா மோனிகா கன்னடம்
கும்னாம் - மர்மம் ரெமோன் இந்தி
மஸ்த் மஜா மாடி அவராகவே கன்னடம் சிறப்பு தோற்றம்
2009 அஞ்சாதிரு
சவாரி சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டது, - கன்னடம்
கலாகார்
ஹரிகதே
ஐபிசி பிரிவு 300 ஷீலா
2012 சித்தலிங்கு ஆண்டாளம்மா சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது - கன்னடம்[11]
ஷிவா அவராகவே சிறப்பு தோற்றம்
கத்தரி விர சுரசுந்தராங்கி அவராகவே சிறப்பு தோற்றம்
2013 சலசலப்பு
மைனா கீதா
ஜிங்கிமரி அவராகவே சிறப்பு தோற்றம்
ஆரம்பம் ரம்யா தமிழ்
2016 டீல் ராஜா கன்னடம்
நீர் டோஸ் சாரதா மணி சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டது, - கன்னடம்

துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான சீமா விருது பரிந்துரைக்கப்பட்டது,
2018 டபுள் என்ஜின் சுமா
2019 காவலுதாரி மாதுரி
தண்டுபால்யா 4
லேடீஸ் டைலர்
2021 கபடதாரி ரம்யா தமிழ்
கபடதாரி ரம்யா தெலுங்கு
2022 உள்துறை அமைச்சர் கன்னடம்
பெட்ரோமாக்ஸ் சுப்புலெட்சுமி படப்பிடிப்பு முடிந்தது[12]
தோத்தாபுரி1 ஷகிலா பானு படப்பிடிப்பு முடிந்தது[13]
தோத்தாபுரி 2 ஷகிலா பானு படப்பிடிப்பு முடிந்தது[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Suman ties the knot with businessman Sajan". The Times of India. 6 June 2019.
  2. "Gorgeous Suman Ranganath Reveals her Remuneration for #Kavaludaari on #Scrapbook with RJ Nethra". YouTube. Archived from the original on 22 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 30 September 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  3. "Best of Bollywood, South Cinema, Celebrity Photos & Videos | MSN India". MSN. பார்க்கப்பட்ட நாள் 30 September 2020.
  4. "Suman ties the knot with businessman Sajan". The Times of India. 6 June 2019.
  5. "Pudhu Pattu (1990) - Review, Star Cast, News, Photos".
  6. "Now Suman Ranganathan gets into body-double trouble". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  7. "Suman Ranganath back on small screen to judge dance reality show". 29 January 2019. http://www.newindianexpress.com. 
  8. "'Aarambam' is Suman Ranganathan's comeback vehicle - Tamil News". 26 October 2013.
  9. "Neer Dose: Serving up a heavy dose of misogyny". https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/Neer-Dose-Serving-up-a-heavy-dose-of-misogyny/article14626496.ece. 
  10. "'Kavaludaari' review: A brilliant neo-noir film that keeps you hooked to your seat". 12 April 2019.
  11. "And the Filmfare Award for Kannada goes to... - Times of India". The Times of India.
  12. "Suman Ranganath deglams for a cameo in Petromax - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  13. Anjanappa, Bharath (23 January 2022). "'Thotapuri' first glimpse tomorrow". thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  14. "Dhananjaya and Suman Ranganath are shooting in Alleppey - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமன்_ரங்கநாதன்&oldid=3742584" இலிருந்து மீள்விக்கப்பட்டது