சுப்ரத் குமார் ஆச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்ரத் குமார் ஆச்சார்யா
Subrat Kumar Acharya
பிறப்பு1 நவம்பர் 1951 (1951-11-01) (அகவை 72)
பாலாசூர், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
கல்விமருத்துவத்தில் முனைவர் பட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்மகாராசா கிருட்டிண சந்திரா கசபதி மருத்துவமனை, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி
பணிசெயல் இயக்குனர், ராசன் தால் மருத்துவமனை புதுதில்லி
விருதுகள்பத்மசிறீ

மருத்துவர் சுப்ரத் குமார் ஆச்சார்யா (Dr. Subrat Kumar Acharya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இரையகக் குடலியல் மருத்துவராவார். 1951 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி பிறந்தார்.[1] கல்லீரல் மாற்று மருத்துவத்திலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார். மருத்துவ விஞ்ஞானி, எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் என பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறார்.[2] ஒரு மருத்துவராக இவரது தொழில்முறை வலிமையைத் தவிர சிக்கலான நோய்களுக்கு பரிவுணர்ச்சியுடன் நோயாளி மைய அணுகுமுறை சிகிச்சையளிப்பவர் என்பதற்காக நன்கு அறியப்பட்டார். நோயாளிகளின் பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்வதல், துல்லியமான மற்றும் நன்கு சிந்திக்கக்கூடிய நோயறிதலை முன்வைத்தல், நோயாளிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப சிறந்த சிகிச்சையை பரிந்துரைத்தல் போன்ற செயல்பாடுகளில் ஆச்சாரியாவின் திறன் வெளிப்பட்டதால் முக்கியமான இரைப்பைக் குடலியல் நிபுணர் என்ற நற்பெயர் இவருக்கு கிடைத்தது. கூடுதலாக, நோயாளியின் கவலைகளை தெளிவுபடுத்துவதற்காக இவர் நேரத்தையும் முயற்சியையும் செலவிடுவார்.

பேராசிரியர் ஆச்சார்யா மதிப்புமிக்க ஓர் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். தனது பாரம்பரியத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் பல இளம் மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். புது தில்லியில் உள்ள எய்ம்சு மருத்துவமனையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் பணிபுரிந்தார். தற்போது ஒரிசா மாநிலத்தின் தலைநகரான புவனேசுவரத்திலுள்ள கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை அதிபராகவும், பிரதியும்னா பால் நினைவு மருத்துவமனையின் இரையகக்குடலியல் மற்றும் கல்லீரலியல் துறைகளுக்கு துறைத் தலைவராகவும் உள்ளார். புதுதில்லியில் உள்ள போர்ட்டிசு சுகாதார அமைப்பின் ராசன் தால் மருத்துவமனையிலும் இரையகக்குடலியல் மற்றும் கல்லீரலியல் துறைகளுக்கு செயல் இயக்குனராகப் பொறுப்பு வகிக்கிறார்.[1] பரணிடப்பட்டது 2021-01-22 at the வந்தவழி இயந்திரம்

2012 ஆம் ஆண்டில் ஆச்சார்யா புவனேசுவர் எய்ம்சு மருத்துவமனையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார், ஆனால் புதுதில்லி எய்ம்சு மருத்துவமனையிலேயே இரையகக் குடலியல் துறையின் துறைத் தலைவராக தனது சேவையைத் தொடரத் தேர்வு செய்தார்.

விருதுகள்[தொகு]

  • பத்மசிறீ விருது, 2014
  • மித்ரா ஒலிம்பசு அகநோக்கியல் விருது
  • பி.என். பெர்ரி விருது
  • பொதுநலவாய மருத்துவ உறுப்பினர் விருது
  • ஓம் பிரகாசு நினைவு விருது
  • கல்லீரல் ஆய்வுக்கான ஆசியா பசிபிக் சங்கத்தின் இளம் ஆராய்ச்சியாளர் விருது.
  • சமந்தா சந்திரசேகர் விருது, 2003[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fellows". The Indian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 23 August 2014.
  2. "Indian Fellow". INSA. Archived from the original on 8 September 2014. பார்க்கப்பட்ட நாள் 23 August 2014.
  3. "Details of the Previous Winners". Odisha Bigyan Academy. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்[தொகு]