சுபாதார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுபாதார் (ஆங்கிலம்:Subahdar) ( உருது: صُوبہ دار ) ( நசிம் அல்லது ஆங்கிலத்தில் " சுபா " என்றும் அழைக்கப்படும் [1] ) சுபேதார் என்பது இந்தியாவில் முகலாயப் பேரரசு காலத்தில் இருந்த ஒரு மாகாணத்தின் ஆளுநரின் பதவிகளில் ஒன்றாகும். அவர் சாகிப்-இ-சுபா அல்லது நசிம் என்ற வெவேறு பெயர்களில் நியமிக்கப்பட்டுள்ளார். சுபாதர் என்ற சொல் பாரசீக மொழியிலிருந்து வந்துள்ளது.

முகலாய மாகாண நிர்வாகத்தின் தலைவராக சுபாதர் இருந்தார். அவருக்கு மாகாண திவான், பக்சி, பாச்தார், கோட்வால், காசி, சதர், வகா-இ-நவிசு, கானுங்கோ மற்றும் பட்வாரி ஆகியோர் உதவி செய்து வந்தனர் .[2] சுபாதார்கள் பொதுவாக முகலாய இளவரசர்கள் மூலமாகவோ அல்லது மிக உயர்ந்த பதவிகளை வைத்திருந்த அதிகாரிகள் மூலமாகவோ நியமிக்கப்பட்டனர்.

நசிம்[தொகு]

நசிம் என்ற வார்த்தை "அமைப்பாளர்" அல்லது "நடத்துனர்" என்ற அரபு வார்த்தையிலிருந்து வந்துள்ளது. நகரத் தந்தையைப் போலவே, பாக்கித்தானில் உள்ள நகரங்கள் மற்றும் நகரங்களின் ஒருங்கிணைப்பாளராக ஒரு நசிம் உள்ளார். ஒரு மாவட்டம், வட்டம், ஒன்றியக்குழு அல்லது கிராம சபை போன்ற பாக்கித்தானில் உள்ளூராட்சி மன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அதிகாரியை உருது மொழியில் நசிம் என்றத் தலைப்பில் அழைக்கப்பட்டனர். அதேபோல், ஒரு துணை நகரத்தந்தையை உருது மொழியில் நைப் அழைத்தானர். நைப் என்ற சொல்லுக்கு "உதவியாளர்" அல்லது "துணை" என்று பொருள்படும். எனவே நைப் நசிம் ஒரு துணை நகரத் தந்தையின் செயல்பாட்டில் ஒத்தவர் ஆவார்.[3] அவர் நகரத்தின் பாதுகாவலராகவும் இருந்துள்ளார்.[4]

பாக்கிஸ்தானில் உள்ள இஸ்லாமிய மாணவர்களின் ஒன்றியமான இஸ்லாமிய ஜாமியத்-இ-தலாபாவின் தலைவருக்குப் பயன்படுத்தப்படும் பெயர் நசிம்-இ-ஆலா என்பதாகும். நசிம்-இ-ஆலா இந்தப் பதவிக்கு ஒருவர் ஒரு வருடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த பதவிக் காலத்தை முடித்த பின்னர், அர்கான் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய ஜாமியத்-இ-தலாபாவின் உறுப்பினர்கள் அனைவரும் புதியதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். "தலைமை நசிம்" அல்லது மாவட்ட நசிம், ஒன்றிய அமைப்பு, ஒன்றிய அமைப்பாளர்கள் மற்றும் வட்ட நசிம்களின் நசிம்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர்கள் உள்ளூர் மக்களின் வாக்குகளால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பாக்கித்தான் முதலில் பிரித்தானிய ஆட்சியின் காலத்திலிருந்து பெறப்பட்ட ஒரு அமைப்பைக் கொண்டிருந்தது, அதில் ஒரு நகரத்தந்தை ஒரு மாவட்டத்தின் தலைவராக இருந்தார். இருப்பினும், உள்ளூராட்சி சட்டத்தின் கீழ், நசிமின் பங்கு நகரத் தந்தையிடமிருந்து வேறுபட்டது. இது அதிக அதிகாரத்துடன் இருந்தது. பிரித்தன் ஆட்சியின் போது அமைக்கப்பட்ட துறை அலுவலக நடைமுறை பாக்கித்தான் அரசாங்கத்தால் நீக்கப்பட்ட பின்னர் நசிம் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்பு சட்டம் நாட்டில் திணிக்கப்பட்டதிலிருந்து இப்போது எந்தவொரு பிரிவுகளுக்கும் ஆணையர், மாவட்டங்களுக்கான துணை ஆணையர் அல்லது உதவி ஆணையர்கள் பதவிகள் இல்லை. ஒரு விதிவிலக்காக, மத்திய தலைநகரான இஸ்லாமாபாத் உள்ளது. அங்கு துறை அலுவலக அமைப்பு நடைமுறையில் உள்ளது. 2009 ஆம் ஆண்டில், புதிய அரசாங்கம் பிரிவுகளில் துறை அலுவலக முறையை மீட்டெடுத்தது ஆனால் நசிம்களும் ஆட்சியில் உள்ளனர்.

கிரிமினல் வழக்குகளைத் தீர்மானிக்க ஒரு நசிமுக்கு அதிகாரம் உண்டு.[5] பாக்கித்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளில் மிகக் குறைவானவர் நசிம்கள் ஆவார் .

குறிப்புகள்[தொகு]

  1. George Clifford Whitworth. Subah. An Anglo-Indian Dictionary: A Glossary of Indian Terms Used in English, and of Such English Or Other Non-Indian Terms as Have Obtained Special Meanings in India. London: Kegan Paul, Trench & Co. 1885. p. 301.
  2. Mahajan V.D. (1991, reprint 2007). History of Medieval India, Part II, New Delhi: S. Chand, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0364-5, p.236
  3. Zila Nazims & Naib Zila Nazims in the Province of NWFP - NRB Local Government Elections பரணிடப்பட்டது 2009-05-06 at the வந்தவழி இயந்திரம்
  4. "Overview of Town Municipal Administration - City Government of Lahore". Archived from the original on 2008-12-07. பார்க்கப்பட்ட நாள் 2019-12-20.
  5. "A Nazim also decides criminal cases". Archived from the original on 9 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாதார்&oldid=3930070" இலிருந்து மீள்விக்கப்பட்டது