சுதந்திர இந்திய மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்லினில் இந்திய சுதந்திர மையம் ஆரம்பிக்கப்பட்டபோது நடந்த விழா, செர்மனி மற்றும் இந்திய உயர் பதவியாளர்கள் அங்கு உள்ளனர்

சுதந்திர இந்திய மையம் (Free India Centre) என்பது சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தின் ஐரோப்பிய கிளையாகும்.இம்மையம் இந்தியாவின் சுதந்திரத்திற்காக சுபாசு சந்திரபோசு தலைமையில் இயங்கிய ஆசாத் இந்து இயக்கத்தின் தற்காலிக அரசாங்கமாகும். போசு 1942 இல் பெர்லினில் இருந்தபோது மற்றும் ஏ. சி. என். நம்பியார் தலைமையில் நிறுவப்பட்டது.

ஐரோப்பா தலைமையுடனான உறவுகளை நிர்வகித்தல், இந்தியப் படைக்கு ஆதரவளித்தல் மற்றும் ஆட்களை சேர்த்தல், விடுதலை இந்தியா அமைப்பின் வானொலி நடத்துதல் மற்றும் சப்பானியர்கள் ஆதரவுடன் தென்கிழக்கு ஆசியாவில் பெரிய அளவில் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசிற்குத் தேவையான பணிகளைச் செய்தல் போன்றவை இவ்வமைப்பின் கடமைகளாக கருதப்பட்டன. முக்கியத் தலைமையிடம் பெர்லினில் இருந்தாலும், இதன் கிளை அலுவலகங்கள் பாரிசு மற்றும் இத்தாலியில் இருந்தன. சுதந்திர இந்திய மையம் பெர்லினில் உருவாக்கப்பட்டவுடன் செர்மனி அதற்குத் தூதரக வேலைகளுக்கான தகுதியைத் தந்தது. அலுவலகம் டைர்கார்டனில் உள்ள எண் 2 ஏ லிச்சென்சுடைனர் அலீயில் இருந்தாலும் இதன் நடவடிக்கைகள் சில காலமாக விடுதிகளில் அல்லது சார்லோட்டன்பர்க்கில் உள்ள சோபியன்சுட்ராசில் உள்ள போசின் இறுதி இல்லத்தில் நடத்தப்பட்டன[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Werth, Aleander, ed. (1996). A Beacon Across Asia: A Biography of Subhas Chandra Bose. Orient Blackswan. pp. 106–109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8125010289.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதந்திர_இந்திய_மையம்&oldid=2908153" இலிருந்து மீள்விக்கப்பட்டது