சீமா பட்நாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராசிரியர்
சீமா பட்நாகர்
பிறப்புசீமா சிறீவத்சவா
இலக்னோ
குடியுரிமைஇந்தியர்
தேசியம் இந்தியா
துறைசிறிய மூலக்கூறு மருந்து கண்டுபிடிப்பு
பணியிடங்கள்நொய்டா அமித்தி பல்கலைக்கழகம்
கல்விமுனைவர் (வேதியியல்)
கல்வி கற்ற இடங்கள்மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம்
லக்னோ பல்கலைக்கழகம்
இசபெல்லா தோபர்ன் கல்லூரி
ஆய்வேடுசாத்தியமான விந்தணுக்களின் முகவர்கள் (1998)
ஆய்வு நெறியாளர்அமியா பிரசாத் பதுரி[1]
அறியப்படுவதுபுற்றுநோய்க்கெதிரான மருந்து கண்டுபிடிப்பு
விருதுகள்புது தில்லியின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின், மூத்த ஆராய்ச்சி கூட்டாளர் (விரிவாக்கப்பட்டது). (06 / 99-12 / 99)
பிள்ளைகள்2
இணையதளம்
http://www.amity.edu/aib/Faculty/Resumes/Seema-Bhatnagar.pdf

சீமா பட்நாகர் (Seema Bhatnagar) (பிறப்பு: சீமா சிறீவத்சவா) ஓர் இந்திய விஞ்ஞானி ஆவார். இவரது பணி புற்றுநோய்க்கெதிரான மருந்து கண்டுபிடிப்புத் துறையில் இருந்தது . [2] இவர் முதன்மையாக மார்பகப் புற்றுநோய்க்கான மருந்துகளை இலக்குகளைக் கொண்டிருக்கும் வேதித் தொகுப்பு அணுகுமுறைகளில் பணியாற்றுகிறார்.

கல்வி[தொகு]

சீமா பட்நகர் 1992இல் இளம் அறிவியலில் பட்டம் பெற்ற பிறகு இலக்னோவின் இசபெல்லா தோபர்ன் கல்லூரியில் கரிம வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். (1994). இலக்னோவின் மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் வேதியியலில் தனது ஆராய்ச்சியை முடித்தார் (1999). இவரது ஆய்வறிக்கை அமியா பிரசாத் பதுரியின் வழிகாட்டுதலின் கீழ் இருந்தது. [1]

சொந்த வாழ்க்கை[தொகு]

பட்நாகர் இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் இலக்னோ நகரில் பிறந்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இணை இயக்குநராக இருந்த ராம் சந்திர சிறீவத்சவா என்பவருக்கும், மீரா சிறீவத்சவா என்பவருக்கும் மூத்த மகளாவார். இவர், ஒரு தகவல்தொழில்நுட்ப ஆலோசகரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Amiya P. Bhaduri's research works - Central Drug Research Institute, Lucknow (CDRI) and other places". ResearchGate. Archived from the original on 2018-10-06. பார்க்கப்பட்ட நாள் 2018-08-10.
  2. "Seema Bhatnagar". researchgate.net. Research Gate.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமா_பட்நாகர்&oldid=3132876" இலிருந்து மீள்விக்கப்பட்டது