சீத்தாராம் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீத்தாராம் சிங்
Sitaram Singh
எம்.பி
பின்னவர்ரமா தேவி
தொகுதிசியோகர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-11-12)12 நவம்பர் 1948
மோதிகாரி, பீகார்
இறப்பு11 சனவரி 2014(2014-01-11) (அகவை 65)
தில்லி, இந்தியா
அரசியல் கட்சிராசுடிரிய சனதா தளம்
துணைவர்ராச்குமாரி தேவி
பிள்ளைகள்3 மகன்கள் மற்றும் 3 மகள்கள்
வாழிடம்மோதிகாரி
As of 25 செப்டம்பர், 2006

சீத்தாராம் சிங் (Sitaram Singh) இந்தியாவின் பதினான்காவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். 1948 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் பிறந்த இவர் 2014 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் நாள் வரை வாழ்ந்தார் [1]. ராசுடிரிய சனதா தளம் கட்சியின் உறுப்பினரான இவர் பீகார் மாநிலத்தின் சியோகர் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 1990 முதல் 1995 வரை பீகாரில் தனிப் பொறுப்பில் மாநில அமைச்சராக பணியாற்றியுள்ளார். சீத்தாராம் சிங் 1995- முதல் 2004 வரை பீகாரின் அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றினார். 1985 முதல் 2004 வரை இவர் தொடர்ச்சியாக நான்கு முறை மதுபன் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். . மக்கள் தலைவராக கருதப்பட்ட சீத்தாராம் சிங், சமூகத்தின் முன்னேற்றத்திற்கான தனது போராட்டத்தைத் தொடர்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former Bihar minister Sitaram dead, CM announces state funeral". Business Standard E-Paper. 11 January 2014. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீத்தாராம்_சிங்&oldid=3941859" இலிருந்து மீள்விக்கப்பட்டது