சி. வி. ஆர். பணிக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. வி. ஆர். பணிக்கர்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
16 பிப்ரவரி 1977 – சூன் 1977
முன்னையவர்வே. கார்த்திகேயன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅகத்து 1926
இறப்பு19 ஜனவரி 2020 (அகவை 93)
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

சி. வி. ஆர். பணிக்கர் (C. V. R. Panikar) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். 1949-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2]

அரசுப் பணிகள்[தொகு]

1949 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழகத்தின் 20-வது தலைமைச் செயலாளராக 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-இல் பொறுப்பேற்றார். 1984-ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின் மாநில திட்ட கமிஷனின் தலைவராகவும் பணியாற்றினார்.

மறைவு[தொகு]

தனது 93 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 19 ஜனவரி 2020 அன்று காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. T. Ramakrishnan, ed. (12 Jan 2020). Former T.N. Chief Secretary Panikar no more. The Hindu.
  2. T. Ramakrishnan, ed. (14 Jan 2020). C.V.R. Panikar passes away. The Hindu.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வி._ஆர்._பணிக்கர்&oldid=3855513" இலிருந்து மீள்விக்கப்பட்டது