வே. கார்த்திகேயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வே. கார்த்திகேயன் (பிறப்பு:07-11-1924[1] இறப்பு:4-12-2014) என்னும் வேதகிரி கார்த்திகேயன் தமிழக அரசின் தலைமைச் செயலாளராகவும், இரண்டு முறை ஆளுநரின் ஆலோசகராகவும் இருந்தவர். தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மக்கள் கொடையுடன் சரபோசி கல்லூரி கட்டடத்தைக் கட்டிமுடித்தற்காக அப்போதைய முதல்வர் காமராசரால் பாராட்டைப் பெற்றவர்.

வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

பிறந்த ஊர் செங்கல்பட்டு வட்டம், பொன்மார் சிற்றூர். தந்தை பி.வேதகிரி, தாய் திரிபுரசுந்தரி. சொந்த ஊரில் பள்ளிக்கல்வி. சென்னை கிருத்தவக் கல்லூரியில் இண்டர் மீடியட், பி.ஏ. ஹானர்ஸ்(வரலாறு, பொராளாதாரம், அரசியல்) சென்னைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது தகுதிநிலையில் (ரேங்) தேர்வு.

பணி[தொகு]

  • 1946இல் குமாஸ்தாவாகப் பணி
  • 03-03-1948இல் ஐ.ஏ.எஸ். தேர்வு[1].
  • 1956இல் தஞ்சை மாவட்ட ஆட்சியர்.
  • 1958 முதல் வருவாய் வாரியம் வேளாண் துறை, தலைமைச்செயலகம், தில்லியில் பெட்ரோலிய அமைச்சகம், பிறகு தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் எனப் பல்வேறு பணிகள்.
  • இறுதியில்1976 முதல் 1981 தலைமைச் செயலாளர்.
  • 30-04-1983ஆம் ஆண்டில் ஓய்வு[1]

பொறுப்பு[தொகு]

  • 1977ஆம் ஆண்டிலும் 91ஆம் ஆண்டிலும் இரண்டு முறை ஆளுநரின் ஆலோசகர்.
  • மாநில திட்டக் குழுவின் தலைவர்.
  • ஓய்வுபெற்ற பிறகு பல்வேறு தொண்டு நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார்.
  • அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக் கழகங்களின் ஆட்சிக் குழுவில் இருந்துள்ளார்.[2]

குடும்பம்[தொகு]

இவரது மனைவியின் பெயர் பரவதம்மாள். இவருக்கு நடராஜன், கிருஷ்ணகுமார், விஜயகுமார், ஆகியமகன்களும், விஜயலட்சுமி, உஷா ஆகியோர் மகள்களாவர். முதல் மகன் நடராஜனின் மனைவி முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆவார்.

மறைவு[தொகு]

கார்திகேயனுக்கு 31.11.2014 அன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4.12.2014 அன்று காலமானார்.[3]

உசாத்துணை[தொகு]

  • தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Indian Civil Service, Tamilnadu: Retired Officers List
  2. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்42
  3. காலைக்கதிர்,5.12.2014, செய்தி, முன்னாள் தலைமை செயலாளர் வி.கார்திகேயன் மரணம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._கார்த்திகேயன்&oldid=2784821" இலிருந்து மீள்விக்கப்பட்டது