சிவதொண்டன் சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிவதொண்டன் சபை இலங்கையில் செயல்படும் ஒரு இந்து சமய அமைப்பாகும். இது யாழ்ப்பாணம் சிவயோக சுவாமிகளின் திருவுளப்படி அன்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட சிவதொண்டன் நிலையங்களை நிர்வகிக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டது.

சிவதொண்டன் சபை இலங்கைக் குடியரசின் சபைகளுக்கான சட்டத்தின் (Societies Ordinance), சரத்து 3பி இன் கீழ்ப் பதிவுசெய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சபையாகும். இதன் நிர்வாகத்தின் கீழ் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையம், மட்டக்களப்பு செங்கலடி சிவதொண்டன் நிலையம், யோகசுவாமிகளது சமாதிக் கோயில் ஆகியன நிருவகிக்கப்படுகின்றன. சிவயோகசுவாமிகளால் தொடங்கப்பட்ட சிவதொண்டன் செந்தமிழ் ஆங்கிலத் திங்கள் இதழைத் தற்போது சிவதொண்டன் சபை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

வெளி இணைப்புக்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிவதொண்டன்_சபை&oldid=919271" இருந்து மீள்விக்கப்பட்டது