சிலந்தி பொறி வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிலந்தி பொறி வரி (Trap line) என்பது சில விண்மீன் நெசவு சிலந்திகள் தங்கள் வலையில் புதிதாகப் பிடிக்கப்பட்ட இரையைப் பற்றி அறியும் ஒரு விழிப்புணர்வு முறையாகும்.[1]

இவை பட்டினால் ஆன தடம் ஒன்றினை வலையின் மையத்தில் சுற்றி இணைக்கின்றது. சிலந்தி இதன் அருகில் தங்கி, இதன் இரைக்காகக் காத்திருக்கிறது. பெரும்பாலும் அல்லது கொசு போன்ற சிறிய பூச்சி இந்த வலையில் ஒட்டிக்கொள்ளும். இரை வலையில் இருக்கும்போது பொறி தடம் அதிர்கிறது. இந்த அதிர்வு சிலந்திக்கு விழிப்புணர்வினைத் தரும். இதனால் சிலந்தியானது இரையை நோக்கிச் சென்று இரையினை உண்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலந்தி_பொறி_வரி&oldid=3743354" இலிருந்து மீள்விக்கப்பட்டது