பயனர் பேச்சு:Aswn: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
→‎பதக்கம்: *மறுமொழி*
வரிசை 249: வரிசை 249:
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
|-
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | சென்ற ஒரு ஆண்டில் (2019 சன- 2020 சன ) அதிகமாக மற்றும் சிறப்பாக நிர்வாகப் பணிகளை மேற்கொண்டதற்காக இந்தப் பதக்கத்தினை தங்களது வழங்ன்குவதில் மகிழ்ச்சி. --[[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 14:59, 10 பெப்ரவரி 2020 (UTC)
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | சென்ற ஒரு ஆண்டில் (2019 சன- 2020 சன ) அதிகமாக மற்றும் சிறப்பாக நிர்வாகப் பணிகளை மேற்கொண்டதற்காக இந்தப் பதக்கத்தினை தங்களது வழங்குவதில் மகிழ்ச்சி. --[[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 14:59, 10 பெப்ரவரி 2020 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#175|பதிகை]])</small>
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#175|பதிகை]])</small>
|}
|}
:மிக்க நன்றி ஸ்ரீதர் அவர்களே! --[[பயனர்:Aswn|அஸ்வின்]] ([[பயனர் பேச்சு:Aswn|பேச்சு]]) 15:02, 10 பெப்ரவரி 2020 (UTC)

15:02, 10 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


தொகுப்பு 1
தொகுப்பு 2

விக்கித்தரவில் இணைப்பு

நீங்கள் புதிதாக எழுதும் கட்டுரைகள், மற்றும் உருவாக்கும் பகுப்புகளுக்கு அவற்றுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகள் அல்லது பகுப்புகள் இருந்தால் அவற்றுக்கு விக்கித்தரவின் மூலம் இணைப்பைக் கட்டாயம் தாருங்கள். கட்டுரைகளை, பகுப்புகளை விக்கித் தரவில் இணைப்பது என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.--Kanags \உரையாடுக 08:24, 19 மார்ச் 2017 (UTC)

பகுப்பு:பாரமவுண்ட் பிக்சர்ஸ் இல் இணைக்க கால தாமதம் ஆகிவிட்டது. எனினும் பார்க்க. நன்றி --அஸ்வின் (பேச்சு) 09:02, 19 மார்ச் 2017 (UTC)

மகிழ்ச்சி

மீண்டும் உங்கள் பங்களிப்புகள் தென்படுவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களியுங்கள். --இரவி (பேச்சு) 09:31, 21 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:06, 30 ஏப்ரல் 2017 (UTC)

அஸ்வின், மிகவும் தேவையானதை (விக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம் ) உருவாக்கியுள்ளீர்கள். நன்றி. அட்டவணையில் குறுங்கட்டுரை, கட்டுரை...என்பன பைட்டுகள் என எழுதப்பட்டுள்ளது. நானும் முதலில் அவ்வாறே நினைத்தேன். விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#படிமுறை என்பதன் மேலே இதைப்பற்றிய உரையாடல் நடந்தது. இது weighted size in characters ஆகும். தற்போதைக்கு "மொழி வரியுருக்கள் அளவு " என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சரியான மொழிபெயர்ப்பு இருந்தால் தாருங்கள். --சி.செந்தி (உரையாடுக) 18:57, 7 மே 2017 (UTC)[பதிலளி]
@Drsrisenthil: 'ஈடிட்ட வரியுருக்களின் அளவு' அல்லது 'எடையிட்ட வரியுருக்களின் அளவு' என்பது சரி என்று எண்ணுகிறேன். --அஸ்வின் (பேச்சு) 19:09, 7 மே 2017 (UTC)[பதிலளி]
நன்றி, அட்டவணையில் இருக்கும் "பைட்டுகள்" (e.g. > 30000 பைட்டுகள்) என்பதை மாற்றிவிடமுடியுமா? 'ஈடிட்ட வரியுருக்களின் அளவு' என்பது நன்றாக அமைகின்றது. அதனையே இதற்கு வைக்கலாம்.--சி.செந்தி (உரையாடுக) 19:18, 7 மே 2017 (UTC)[பதிலளி]

சந்தேகம்

இச்சிறுமாற்றம் தானியங்கித் தரவேற்றத்தை குழப்பாது தானே. 10,000 கட்டுரைப் புள்ளிகளின் விபரம் தேவையில்லை. அதை நீக்குவதே சிறப்பெனக் கருதுகின்ரேன். 10,000 கட்டுரைகளின் அடிப்படையில் எங்கும் விக்கிப்பீடியாவின் தரத்தைக் கணிப்பது இல்லை. அதை நீக்கிவிடுங்கள். ஆயிரம் கட்டுரைப்புள்ளிகள் மட்டும் இருக்கட்டும். உதவிக்கி ஏராளமான நன்றிகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:38, 8 மே 2017 (UTC)[பதிலளி]

@Shriheeran: கட்டுரைகளின் அளவு பைட்டுகளில் குறியிடப்படுகின்றது. அதன் ஈடிட்ட வரியுருக்களின் அளவும் பைட்டுகளே அல்லவா? விரிவாக்கப்பட்ட முக்கிய கட்டுரைகளும் அவசியமே. பார்க்க. மேலும் அதன் குறுங்கட்டுரைகள் மற்றும் கட்டுரைகள் அப்பக்கத்தில் பட்டியலிடப்படவில்லை. வெறும் புள்ளிவிவரம் மட்டுமே. நன்றி. --அஸ்வின் (பேச்சு) 14:58, 9 மே 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

பக்கங்களை நகர்த்தும்போது பயனர் பக்கத்தில் குறிப்பிடுங்கள். பயனர் மீளவும் புதியகட்டுரை தொடங்க வாய்ப்புள்ளதாலும், பயிற்சியின்போது திருத்துவதற்கு உதவியாகவும் இருக்கும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. --AntanO 07:10, 10 மே 2017 (UTC)[பதிலளி]
அவ்வாறே செய்கிறேன். நன்றி --அஸ்வின் (பேச்சு) 07:11, 10 மே 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

நுட்பப் பதக்கம்
நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான தரவுகள், புள்ளிவிவரங்களைத் தொகுத்துத் தருவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். இவற்றை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதைத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆவணப்படுத்தினால், இன்னும் பல தமிழ் விக்கிப்பீடியர் நுட்பத் திறன்கள் பெற்று மிளிர முடியும். --இரவி (பேச்சு) 04:15, 16 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:48, 16 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:56, 16 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:24, 16 மே 2017 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி அனைவருக்கும். ஸ்கிரிப்டுகளை விரைவில் பதிவேற்றம் செய்கிறேன். --அஸ்வின் (பேச்சு) 16:02, 17 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:04, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:38, 31 மே 2017 (UTC)[பதிலளி]

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:21, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

வேண்டுகோள்

தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம் சரியாகப் பதிவேர்றப் படவில்லை. இப்பிரச்சினை பல நாட்களாக உள்ளது. கட்டுரைகளின் Characters எண்ணிக்கை சரியாகக் காட்டப்படவில்லை. தயவுசெய்து வழுவை சரிசெய்ய வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:15, 22 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று --அஸ்வின் (பேச்சு) 18:24, 7 செப்டம்பர் 2017 (UTC)
நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:00, 8 செப்டம்பர் 2017 (UTC)

ஆசிரியப் பயனர் கட்டுரைகள்

துப்புரவு முடிந்த பகுப்புகளை மட்டும் மறைத்து விடுங்கள். ஏனையவற்றில் இருந்து (உ+ம்: பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்) மறைப்பு வார்ப்புருவை நீக்கி விடுங்கள்.--Kanags \உரையாடுக 00:22, 17 செப்டம்பர் 2017 (UTC)

உதவி

வணக்கம். diene என்ற ஆங்கிலக் கட்டுரை தவறுதலாக ஆல்காடையீன் என்ற கட்டுரையுடன் விக்கித்தரவில் இணைக்கப்பட்டுள்ளது. சரி செய்யவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 00:53, 4 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

@கி.மூர்த்தி:Y ஆயிற்று--அஸ்வின் (பேச்சு) 00:56, 4 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

ː நன்றி, அசுவின்--கி.மூர்த்தி (பேச்சு) 00:59, 4 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

உங்கள் தானியங்கி தொடர்பான கருத்து

வணக்கம் அசுவின், நீங்கள் இயக்கும் தானியங்கியின் தொழிற்பாடு பற்றி நான் பார்த்த அளவில் சில கருத்துகள்: நீங்கள் செய்துள்ள இந்த மாற்றத்தைப் பாருங்கள். இவ்வாறான மாற்றங்களை தானியங்கி மூலம் மாற்றுவது விரும்பத்தக்கதல்ல. இவை தனித்தனியே மாற்றப்பட வேண்டும். அத்துடன் அனைத்துக் கட்டுரைகளிலும் உள்ள India என்ற சொல்லை இந்தியா என மாற்றும் போது வேறு பல சிக்கல்கள் உருவாகக் கூடும். உதாரணமாக சில வார்ப்புருக்களில் (உ+ம்: locaition Maps களில்) India என்றே இருக்க வேண்டும். இல்லையெனில் இணைப்புகள் அறுந்து விடும். எனவே இதுபோன்ற துப்பரவுகளை மேற்கொள்வதில் அதிக கவனம் வேண்டும். என்னைப் பொருத்தவரையில், இவற்றைத் தவிர்ப்பது நல்லது.--Kanags (பேச்சு) 10:16, 11 சனவரி 2018 (UTC)[பதிலளி]

உங்கள் தானியங்கி பல தவறான தொகுப்புகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக ஆறு மாத காலத்துக்கு உங்கள் தானியங்கி மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை தவறென்று கருதும் பட்சத்தில், உங்கல் கருத்தைத் தாருங்கள். உங்கள் தானியங்கியை மீளப் பரிசோதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags (பேச்சு) 07:43, 19 சனவரி 2018 (UTC)[பதிலளி]
@Kanags:இத்தடையினை விளக்க இயலுமா? இத்தானியங்கி முதன்மை பெயர்வெளியில் இயங்குவது எனது மேற்பார்வையிலேயே. தானியக்கமாக எவ்விதமான கட்டுரையிலும் மாற்றங்கள் செய்வதில்லை. மேலே குறிப்பிடப்பட்ட பிழையிற்கு எதற்கு 6 மாத தடை? எனது அலசலில் வேறு எதுவும் புலப்படவில்லை. தடையினை நீக்கியுள்ளேன். இதில் ஏதேனும் பிழை இருந்தால் சொல்லுங்கள். --அஸ்வின் (பேச்சு) 17:39, 19 சனவரி 2018 (UTC)[பதிலளி]
அசுவின், உங்களது தானியங்கியின் மேலே குறிப்பிடப்பட்டது மட்டுமல்ல வேறு பல செயற்பாடுகள் என்னாலோ அல்லது வேறு பயனர்களாலோ மீளமைக்கப்பட்டுள்ளன. இது ஓர் உதாரணம் மட்டுமே. தானியங்கி எல்லோரினதும் கண்களிலும் படுவதில்லை. அவ்வப்போது ஏதாவது கட்டுரைகளைக் கவனிக்கும் போது தான் தானியங்கியின் தவறுகள் தெரிய வரும். உங்கள் தானியங்கி தவறு விடும் பட்சத்தில் அதனைத் தடுத்து விடுங்கள் என்று நீங்கள் ஒப்புதல் அளித்திருக்கிறீர்களே. அவ்வாறிருக்க நீங்கள் எவ்வாறு தடையை மீளமைக்கலாம். விளக்கம் கேட்க வேண்டாமா? நான் உங்களுக்கு மீண்டும் தடை வழங்கப்போவதில்லை. ஆனாலும், உங்கள் நிருவாக அணுக்கத்தை நீங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகக் கருதலாமா? இனிமேலும் தவறுகள் நடைபெறும் பட்சத்தில் தானியங்கி அணுக்கத்தை இடைநிறுத்தக் கோருவேன்.--Kanags (பேச்சு) 21:02, 19 சனவரி 2018 (UTC)[பதிலளி]
@Kanags:தடுக்கும் உரிமம் தானியங்கி செய்யும் கண்காணிக்காத திருத்தங்களை தடுக்க கொடுக்கப்பட்டுள்ளது. இவை நடந்து கொண்டிருக்கும் பிழைகள் அல்ல. மீண்டும் மீண்டும் நடக்கும் அதே பிழைகளும் அல்ல. முன்னமே நிகழ்ந்த அதே பிழைகளும் அல்ல. எதன் அடிப்படையில் 6 மாத தடை விதித்தீர்கள்? 67000+ தொகுப்புகளில் சில பிழைகள் நிகழத்தான் போகின்றன. என்னால் முடிந்தவரையில் இவை நிகழா வன்னம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவை அனைத்தும் ஒரே மாதிரியான திருத்தங்கள் அன்று. ஏதேனும் செயலுக்கு தானியங்கி தேவை என்று தெரிகிறதோ அப்பொழுது மட்டுமே எனது மேற்பார்வையில் அது செயல்படுத்தப்படுகின்றது. தாங்கள் கூறிய இரண்டாம் பிழை தானியங்கியினது கிடையாது, பார்க்க. ஆங்கில விக்கியில் அப்பகுப்பு இணைக்கப்பட்டதன் எதிரொலி. இவை எதிர்பாராத பிழைகள்.
தடையின் தேவையே இல்லாத பொழுது அதை நீக்கினால் ஒரு பிழையும் இல்லை. இதில் தவறு ஏதும் இல்லை. நீங்கள் கூறிய இரு பிழைகளுக்கும் நடுவில் 25000+ தொகுப்புகள் உள்ளன, எல்லாம் பிழைகளா? அரை சதவிகிதம் கூட இப்பிழைகள் இருக்காது.
நான் நிருவாக அணுக்கத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் அதை எங்கு கூற வேண்டுமோ அங்கு கூறுங்கள். பார்க்கலாமே! --அஸ்வின் (பேச்சு) 22:36, 19 சனவரி 2018 (UTC)[பதிலளி]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு

வணக்கம்.

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:15, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

உங்கள் தானியங்கி செயற்பாடு

உங்கள் தானியங்கியின் செயற்பாடுகள் பல தவறான தொகுப்புகளைத் தந்துள்ளது. குறிப்பாக பகுப்புகளில் பிறந்த, இறந்த ஆண்டுகள். (உ+ம்: ப. அ. தோமசு) வேறு தவறுகளும் நிகழ்ந்திருக்கின்றன (உ+ம்: மக்கள் நீதி மய்யம்). ஒவ்வொன்றாக நான் ஆராயவில்லை. ஆனால் ஆராய வேண்டும் போலத் தெரிகிறது. முன்னொரு முறை உங்கள் தானியங்கியின் தவறான தொகுப்புகளை அடுத்து நான் தற்காலிகமாகத் தடை செய்த போது நீங்கள் அத்தடையை உடனடியாக நீக்கி விட்டீர்கள் இவ்வாறு நீங்கள் உங்கள் நிருவாக அணுக்கத்தைத் தவறான வழியில் பயன்படுத்தினீர்கள். மீண்டும் தடை செய்தால் அது நிரந்தரமானதாக இருக்கும். அதனை நான் செய்யப்போவதில்லை. உங்களுக்கு தானியங்கி அணுக்கம் தந்தவரை நாடுவேன். நன்றி.--Kanags (பேச்சு) 08:16, 18 ஏப்ரல் 2019 (UTC)

தானியங்கி தேவையான பகுப்புகளை இணைக்குமாறே எனது மேற்பாவையிலேயே இயக்கப்படுகின்றது. சில பிழைகளுக்கு வருந்துகிறேன். அவை சில பிழைகளே பல அன்று! பிற பிழைகள் என்னால் திருத்தப்படுகின்றன. முன்னர் அளித்தத் தடையினை நீக்கியதற்குத் தக்க காரனங்களைத் தெரிவித்துள்ளேன். மீண்டும் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன் - நான் தவறாக நிருவாக அணுக்கத்தைப் பயன்படுத்தியிருந்தால் தக்க இடத்தில் கூறிப் பேசுமாறு. வீண் குற்றச் சாட்டுகள் மற்றும் மிரட்டல்கள் வேண்டமே! தானியங்கி இயக்கப்படுவது தமிழ் விக்கியிற்காகவே. நன்றி --அஸ்வின் (பேச்சு) 08:36, 18 ஏப்ரல் 2019 (UTC)
நான் உங்களை மிரட்டவில்லை. தவறான தானியங்கிகளைத் தற்காலிகமாகத் தடை செய்வது என்பது மிரட்டல் இல்லை. அது இன்னும் கடுமையாக ஆங்கில விக்கிப்பீடியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. சென்ற முறை நீங்கள் உங்கள் நிருவாக அணுக்கத்தைக் கொண்டு நீங்களே தடையை நீக்கினீர்கள். இது முறையானது தான் என நீங்கள் நம்புகிறீர்களா? உங்கள் தானியங்கியை நிரந்தரமாகத் தடுப்பது எனது நோக்கமல்ல. அனைத்துத் தானியங்கிகளும் தமிழ் விக்கிக்காகவே செயல்படுகின்றன. ஆனால் அது முறையாக மற்றவர்களின் பங்களிப்புகளில் தீங்கு ஏற்படாமல் செயற்படுத்தப்பட வேண்டும். நன்றி.--Kanags (பேச்சு) 09:43, 18 ஏப்ரல் 2019 (UTC)
மீண்டும் தங்கள் கவனத்திற்கு காரணங்களைக் கொண்டு வருகின்றேன். இங்கு. தங்களின் இஷ்டத்திற்கு தடை செய்வது முறை எனறு நம்புகின்றீர்களா? சிறு பிழைகளினால் தானியங்கியின் பயன்கள் அனைத்தும் நிறுத்தல் வேண்டுமா? இத்தோடு இங்கு உரையாடலை நிறுத்துவது நல்லது. தங்களுக்கு மேலும் ஆட்சேபனை இருந்தால் விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை உள்ளது. நன்றி --அஸ்வின் (பேச்சு) 10:09, 18 ஏப்ரல் 2019 (UTC)

கவனிக்க

வணக்கம், தாங்கள் தற்போது ஊராட்சிகளின் பெயரின் இறுதியில் அதன் மாவட்ட பெயர்களை இணைத்து வருகிறீர்கள், அதனை விட அந்த ஊராட்சியின் ஒன்றியப் பெயர்களை இறுதியில் இணைத்தால் சரியாக இருக்கும் என கருதுகிறேன்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:13, 18 மே 2019 (UTC)[பதிலளி]

பல்வேறு மாவட்டங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள ஊராட்சிகளுக்கு மட்டுமே இந்த நகர்த்துதலைச் செய்து வருகின்றேன். ஊராட்சியின் ஒன்றியப் பெயர்களை விட மாவட்ட பெயர்கள் பயனர்களுக்கு தெளிவுபடுத்தும் என்று கருதுகின்றேன். நன்றி --அஸ்வின் (பேச்சு) 14:18, 18 மே 2019 (UTC)[பதிலளி]

என்ன குழப்பம் இது?

சையது ஐதர் ராசா வாழும் நபர்கள் என்றும் 2016 இறப்புகள் என்றும் உள்ளது. இவர் செத்துப்போனாரா இல்ல உயிரோடு இருக்கிறாரா? என்ன தம்பி குழப்புறீங்க!!! --க.மாதவன் (பேச்சு) 09:23, 28 மே 2019 (UTC)[பதிலளி]

அண்மையில் இறந்த நபர்கள் கட்டுரைகள் புதுப்பித்தல் வேண்டும். --அஸ்வின் (பேச்சு) 12:11, 28 மே 2019 (UTC)[பதிலளி]

பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்

வணக்கம், நெடுநாள் பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவைப் பெரிதும் விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:53, 19 சூன் 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 14:44, 19 சூன் 2019 (UTC)[பதிலளி]
அழைப்பிற்கு மிக்க நன்றி. ஆனால் தற்போது வேலையில் புதிதாக சேர உள்ளேன். இதனால் செப்டம்பரில் வர இயலுமா என்று தெரியவில்லை. அனைவரும் த.வி. 15 ஆண்டுகள் நிறைவினைச் சிறப்பாக கொண்டாடுங்கள்! —அஸ்வின் (பேச்சு) 18:04, 19 சூன் 2019 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:Navbar

வணக்கம் அசுவின், மேற்படி வார்ப்புருவில் எதற்காக view talk edit என ஆங்கிலத்தில் தெரிகிறது? இம்மாற்றம் இன்று தான் மாற்றியிருக்கிறது. நேற்று தமிழில் தான் இருந்தது? இவ்வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள பக்கங்களிலும் ஆங்கிலத்தில் தெரிகின்றன. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 12:06, 21 சூன் 2019 (UTC)[பதிலளி]

@Kanags:Module:Navbar இனை பதிவிறக்கியதில் மாற்றங்கள் வந்துள்ளன. அதனைத் தமிழாக்கம் செய்துவிட்டேன். இப்போது பார்கவும். நன்றி —அஸ்வின் (பேச்சு) 07:27, 22 சூன் 2019 (UTC)[பதிலளி]

திகதிகளில் வழுக்கள்

@Aswn and Neechalkaran: ஏராளமான கட்டுரைகளில் புதிதாக வழுக்கள் தோன்றியுள்ளன. விரைந்து கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 03:05, 8 சூலை 2019 (UTC)[பதிலளி]

@Kanags:Module:Citation/CS1/Configuration இல் தமிழாக்கம் தேவைப்பட்டது. தற்போது பகுப்பு காலியாக இருக்கும் --அஸ்வின் (பேச்சு) 14:39, 12 சூலை 2019 (UTC)[பதிலளி]
வேறொறு வழு எங்கேயோ உள்ளது. ஆனால் பகுப்பில் எண்ணிக்கை குறைந்துள்ளது--அஸ்வின் (பேச்சு) 14:49, 12 சூலை 2019 (UTC)[பதிலளி]

Community Insights Survey

RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

RMaung (WMF) 17:30, 4 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

வார்ப்புரு வழிமாற்று நீக்கம்

நீங்கள் அண்மையில் ஏராளமான வழிமாற்றுகளை (உ+ம்: Country data Australia, Sri Lanka etc..) நீக்கியிருக்கிறீர்கள். இவை அனைத்தும் ஏராளமான கட்டுரைகளில் இணைக்கப்பட்டு இப்போது சிவப்பு இணைப்புகளாகக் காணப்படுகின்றன. இவை ஏன் நீக்கப்பட வேண்டும். இருப்பதில் என்ன தவறு? இவற்றை மீள்வியுங்கள்.--Kanags \உரையாடுக 09:34, 29 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

தாங்கள் நீக்கிய வழிமாற்றுகளால் ஏராளமான கட்டுரைகளில் சிவப்பு இணைப்புகளாகக் காணப்படுகிறது. இவற்றை மீட்டெடுக்கிறீர்களா அல்லது நானாவது மீட்டெடுக்கட்டுமா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:10, 29 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
இவ்விணைப்புகள் உள்ள கட்டுரைகளை குறிப்பிட வேண்டுகிறேன். @Kanags and Gowtham Sampath:--அஸ்வின் (பேச்சு) 07:30, 30 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
இப்பக்கத்தில் நீங்கள் நீக்கிய (உதாணம்:Country data Australia, Sri Lanka) போன்ற அனைத்து வார்ப்புருக்களையும் மீட்டெடுங்கள்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:37, 30 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
மீளமைக்க தேவையில்லை. @Info-farmer: அவர்கள் ஆங்கில விக்கியிலிருந்து வார்ப்புரு:Flagicon-ஐ பதிவிறக்கம் செய்ததாலேயே இப்பிழை. தற்போது சரிசெய்யப்பட்டது. பல பக்கங்கள் இருப்பதினால் சிறிது நேரத்தில் தெரியும். இந்தளவில் பெரிய பிழைகள் இருந்தால் எந்த வார்ப்புருவினால் ஏற்படுகின்றது என்று ஆராய்ந்தால் உடனடியாக நீக்கிவிடலாம் --அஸ்வின் (பேச்சு) 07:50, 30 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
உ+ம்: முத்தையா முரளிதரன். இவை வார்ப்புருவினால் ஏற்படவில்லை. தனிப்பட்ட கட்டுரைகளில் வழு ஏற்பட்டது. இருந்தாலும், எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் ஏற்பட வாய்ப்பில்லையா? இவற்றை வைத்திருப்பதில் என்ன நட்டம்? Country data வார்ப்புருக்கள் அனைத்தையும் நீக்கியுள்ளீர்கள் போல் இருக்கிறது. அவற்றை மீண்டும் மீளமையுங்கள். அல்லது எனக்கு 200 (x2) நாடுகளுக்கும் மேற்பட்ட வார்ப்புருக்களைத் தேடிக் கண்டுபிடிக்கச் சொல்கிறீர்களா?--Kanags \உரையாடுக 10:42, 30 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பதக்கம்

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
சென்ற ஒரு ஆண்டில் (2019 சன- 2020 சன ) அதிகமாக மற்றும் சிறப்பாக நிர்வாகப் பணிகளை மேற்கொண்டதற்காக இந்தப் பதக்கத்தினை தங்களது வழங்குவதில் மகிழ்ச்சி. --ஸ்ரீ (✉) 14:59, 10 பெப்ரவரி 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

மிக்க நன்றி ஸ்ரீதர் அவர்களே! --அஸ்வின் (பேச்சு) 15:02, 10 பெப்ரவரி 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Aswn&oldid=2909286" இலிருந்து மீள்விக்கப்பட்டது