சிம்பிள் கோகோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்பிள் கோகோய்
சிம்பிள் கோகோய்i 2013ல்
பிறப்புசிம்பிள் கோகோய்
1 ஆகத்து 1976 (1976-08-01) (அகவை 47)
ஜோரத்
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட இயக்குநா்
படத்தயாரிப்பாளர்
திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2001 முதல் தற்போது
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆகாக் (அசாமிய மொழி நெடுந்தொடர்l)
பிரியங்கா(அசாமியத் திரைப்படம்)
அனுராக் துமர் பேபி (தொலைக்காட்சித் தொடர்)
துமி ஜோடி குவா (அசாமியத் திரைப்படம்)
ஏ ஜாக் சொபன் ஜென் பொரோகுன்
பெற்றோர்சரபேஸ்வா் கோகோய்
பூர்ணிமா கோகோய்
உறவினர்கள்அபிலாஷ் கோகோய் சகோதரா்)
பஞ்சமிதா கோகோய் (சகோதரி)

சிம்பிள் கோகோய் (அசாமிய மொழி: চিম্পল গগৈ) (பிறப்பு: 1 ஆகஸ்ட் 1976) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இயக்குநர் ஆவார் [1] . இவரது முதல் படம் துமி ஜோடி குவா, ஆகும். பிரபலமான தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் , விளம்பர படங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் காணொளிகளை இயக்கியுள்ளார். .

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சிம்பிள் கோகோய் அசாமின் ஜோர்ஹாட்டில் பிறந்தார். அவர் மறைந்த சர்பேஸ்வர் கோகோய் மற்றும் மறைந்த பூர்ணிமா கோகோய் ஆகியோரின் இரண்டாவது குழந்தையாவார். ஜோர்ஹாட்டின் ஜகந்நாத் பரோவா கல்லூரியில் பட்டம் பெற்றார். 1998 ஆம் ஆண்டில் அவர் ரஷ்யாவுக்குச் சென்று, மாஸ்கோ மாநில கலாச்சார மற்றும் கலை பல்கலைக்கழகத்தில் விளம்பரம், படத்தொகுப்பு, இயக்கம் குறித்த பாடங்களைப் படித்தார். ரஷ்யாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில் மொழி குறித்த பாடங்களையும் படித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு ரஷ்யாவிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு, ஜீ தொலைக்காட்சியில் ரூ என்ற தொலைக்காட்சித் தொடருக்காக சீ சிவம் நாயருக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றினார். மேலும் வேர்ல்ட் ஆப் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திலும் பணியாற்றிய. அவர் குவஹாத்தியில் இரண்டு ஆண்டுகள் மனஸ் அதிகாரி என்ற இயக்குநருக்கு உதவியாளராகப் பணி புரிந்தார். 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிம்பிள் கோகோய் அசாமிய மொழித் திரைப்படத் தொழிலில் கால்பதித்தார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சிம்பிள் கோகோய் தற்போது அசாம் மாநிலத்தின் தலைநகரான குவகாத்தியில் தனது தங்கை பஞ்சமிதா கோகோய், மூத்த சகோதரர் அபிலாஷ் கோகோய், மைத்துனர் ருப்ஜோதி தத்தா மற்றும் அவரது உறவினர்கள் சிலருடன் வசித்து வருகிறார்.

தொழில்[தொகு]

சிம்பிள் இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பல அசாமிய மொழித் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.[3] ஆகாக் என்ற அசாமிய மொழி நெடுந்தொடரிலும் பிரியங்கா, துமி ஜோடி குவா போன்ற அசாமியத் திரைப்படங்களிலும், அனுராக் துமர்  பேபி என்ற தொலைக்காட்சித் தொடரிலும் பணி ஆற்றியுள்ளார்.[4] ஜூன் 2013 முதல் அக்டோபர் 2014 வரை டி ஒய் 365 என்ற அசாமிய செய்தி தொலைக்காட்சி குழுமத்தின் சகோதர பொழுதுபோக்கு தொலை்காட்சியான ஜோனாக்கில் கருத்தாக்க இயக்குநராகவும் பணியாற்றினார். இந்த தொலைக்காட்சி நிறுவனம் பிரம்மபுத்திரா டெலி தயாரிப்புகள் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும்.[5]

சிம்பிள் கோகோய் வசனம்,திரைக்கதை எழுதிய முதல் அசாமிய மொழி திரைப்படமான தும் ஜோடி குவாவில் ( তুমি যদি কোৱা ) இசை, காதல் நாடகக் கதையம்சம் கொண்ட கதைக்கருவை உருவாக்கி இருந்தார். ரஞ்சன் தத்தா ரூபம் ஷர்மா உள்ளிட்ட நடிகர்கள் நடித்த பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தில் காதல், நட்பு, கருத்துவேறுபாடு போன்றவற்றை இயல்பான தனது திரைக்கதை மூலம் வெளிப்படுத்தி இருந்தார். இந்தப் படம் இசையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தாலும் கதை முழுவதும் நட்பை பின்னணியாகக் பொண்ட கதையாக அமைந்திருந்தது. எல்.என். பிலிம்ஸ் என்ற தாயரிப்பு நிறுவனப் பதாகையின் கீழ் டெரான் ஜிட்டுமோனி தயாரித்த இந்தப் படம் 2013 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.[6] இந்தப் படத்தின் விளம்பர விவகாரங்கள் அனைத்தம் ஷான் கிளெட்டால் நிர்வகிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "rupali parda news". on Rupaliparda. Archived from the original on 29 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 6 November 2012.
  2. "Article/ News". on Meghalaya Times Newspaper. Archived from the original on 9 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Article". on Sentinel Assam. Archived from the original on 2014-10-19. பார்க்கப்பட்ட நாள் 10 November 2012.
  4. "News/ Article". on Sentinel Assam Newspaper. Archived from the original on 2014-01-12. பார்க்கப்பட்ட நாள் 15 December 2012.
  5. https://en.wikipedia.org/wiki/Jonack
  6. "Article/ News". on Sentinel Assam Newspaper. Archived from the original on 12 January 2014. பார்க்கப்பட்ட நாள் 20 April 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்பிள்_கோகோய்&oldid=3929866" இலிருந்து மீள்விக்கப்பட்டது